2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி வைகை ஆற்றில் நடைபெறாமல் அழகர் கோவிலில் உள்ள கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. இதனால் மழை வளம் இல்லை. மதுரை செழிப்பாக இல்லை என பக்தர்கள் வேதனைபட்டு வந்தனர். அவர்களது மனக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான … Read more

பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது: ஜோதிமணி, எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: பெட்ரோல்,டீசல்,சிலிண்டர் கொள்ளையை மறைக்க ஹிஜாப், அசைவ உணவு தடை போன்ற மதம் சார்ந்த விசயங்களை எடுத்து பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என ஜோதிமணி, எம்.பி. குற்றம் சாட்டினார். இதே மத, இனவாத அரசியல்தான் இலங்கை மக்களை அரசுக்கு எதிராக போராடச் செய்திருக்கிறது. அதுவே இங்கும் நடக்கும் எனவும் கூறினார்.

ரூ. 720 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ. ,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2019-20-ம் நிதி ஆண்டில், தேசிய கட்சியான பா.ஜ., பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூ. 720 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்) சார்பில், கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் பாஜ., காங்கிரஸ்., திரிணாமுல் காங்., தேசியவாத காங்., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்கினை தாக்கல் செய்துள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2019-20 நிதியாண்டில் … Read more

ரிஷி சுனக் போட்ட புதிய உத்தரவு..! பிரிட்டன் நாட்டில் கிரிப்டோ ஹப்..!

உலக நாடுகள் மோசமான பணவீக்கத்தையும், பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் வியப்பில் உள்ளது. இந்திய அரசு ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் ரூபாய் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள நிலையில், பல மாத ஆலோசனைக்குப் பின்பு பிரிட்டன் அரசு கிரிப்டோ சந்தைக்குள் நுழைய முடிவு செய்துள்ளது. இதோடு ரிஷி சுனக் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 3 … Read more

“முன்னெப்போதும் இல்லாத சவாலை காங்கிரஸ் சந்திக்கவிருக்கிறது!" – சோனியா காந்தி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸுக்கு வெளியில் இருந்தும், கட்சிக்குள்ளிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸின் இத்தகைய தோல்விக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. அதையடுத்து, நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்று கேள்விகள் பரவலாக எழுந்து வருகிறது. இதுபோன்ற அரசியல் … Read more

புதிய விவாகரத்துச் சட்டம்: நாளை முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வருகிறது

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய விவாகரத்துச் சட்டம் ஒன்று, நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டம் ‘no fault divorce’ என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதியர், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டவேண்டியதில்லை. தங்களுக்கு சேர்ந்து வாழ இஷ்டமில்லை என்றாலே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், தம்பதியரில் ஒருவர் மட்டுமே விவாகரத்துக்கு விண்ணப்பித்தாலே போதும். நாம் சமீப காலமாக விவாகரத்து தொடர்பில் வெளியான பல … Read more

என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பாரிமுனை அருகே உள்ள பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை, நடைபாதை வியாபாரிகளால் முழுமையாக ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து,  மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை … Read more

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாக தடை

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பீஸ்ட் – விஜய் இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை … Read more

தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கல்வி மேம்பட்டுள்ளது. தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம். நமது மாணவர்களுக்கு ஏற்றவாறு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும்; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பொய் மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்தி வெளியிட்ட 22 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. அதில், 4 சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கியவை. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: பொய் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக 2021ம் ஆண்டு ஐடி விதிகள் அடிப்படையில், 22 யூடியூப் சேனல்கள், 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு … Read more