பல்லாரி மேயர் தேர்வில் அதிருப்தி காங்கிரஸ் கவுன்சிலர் ராஜினாமா| Dinamalar

பல்லாரி : பல்லாரி மாநகராட்சி மேயர் தேர்வில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கணவரும் கட்சியை விட்டு விலகினார்.பல்லாரி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் கடந்த மாதம் 19ல் நடந்தது. இதில் காங்கிரசை சேர்ந்த ராஜேஸ்வரி, 40 மேயராகவும், முலான பீவி, 45 துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேயர் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கூட முடிவடையான நிலையில் ஆறாவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பத்ம ரோஜா, தன் … Read more

வாவ்.. சென்னை-யில் அலுவலகத்தை திறக்கும் ZOOM.. வேற லெவல் திட்டம்..!

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் மிக முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிய ஜூம் செயலி நிறுவனம், ஏற்கனவே பெங்களூரில் அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில் தற்போது சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது. சமீப காலமாகப் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தைத் தமிழ்நாட்டில் திறந்து வருகிறது. குறிப்பாக அமேசான் தனது இந்தியாவிலேயே

“மாநில கல்விக் கொள்கை குழுவில் எங்கள் பிரதிநிதிகள் இல்லையா?" -தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு

“தமிழகத்தில் 45 சதவிகித மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் தனியார், சுயநிதி பள்ளிகளின் பிரதிநிதிகளை மாநிலக் கல்விக்குழுவில் சேர்க்க வேண்டும்” என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் புதியக் கல்விக்கொள்கையை வடிவமைக்க மாநில அளவிலான குழுவை அறிவித்துள்ளது தமிழக அரசு. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.முருகேசன் தலையிலான குழுவில் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் … Read more

ரொனால்டோவாக மாறினால்…முதலில் மூளையை ஆய்வு செய்வேன்: விராட் கோலி!

நான் ரொனால்டோவாக மாறினால் எனது மூளையை முதலில் சோதித்து பார்ப்பேன் என இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டா என தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் மத்தியில் பெங்களூரு அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட போட்டோஷுட் நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு விராட் … Read more

பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும்.முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.இன்று முதல் மே 10ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்!| Dinamalar

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி தரும்படி, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லியில் நேற்று வலியுறுத்தினார்.இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று டில்லி சென்றார். அவருடன் அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், சுனில்குமார் ஆகியோரும் சென்றனர். மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். அப்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கும்படி வலியுறுத்தினார்.கர்நாடக சட்டசபையில் தமிழகத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அனைத்து கட்சி … Read more

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பம்: தந்தை மற்றும் மகன் பரிதாப உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் திடீரென ஏற்பட்ட பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், நடைபாதையில் புஷ்வாக்கிங் செய்து கொண்டு இருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் ஒன்பது வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50 வயதுடைய பெண் மற்றும் 14 வயதுடைய சிறுவன் என இருவர் மிக ஆபத்தான நிலையில் … Read more

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் … Read more