அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பம்: தந்தை மற்றும் மகன் பரிதாப உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பத்தின் தந்தை மற்றும் மகன் திடீரென ஏற்பட்ட பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், நடைபாதையில் புஷ்வாக்கிங் செய்து கொண்டு இருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் ஒன்பது வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50 வயதுடைய பெண் மற்றும் 14 வயதுடைய சிறுவன் என இருவர் மிக ஆபத்தான நிலையில் … Read more

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் … Read more

ஏப்-06: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பி.எம்., கேர்ஸ் நிதிக்கு சி.எஸ்.ஆர்., நிதி| Dinamalar

புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, நிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் அளித்த பதிலில் கூறியதாவது: நாட்டில் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தொழிற்சாலைகள், அதில், இரண்டு சதவீதத்தை, சி.எஸ்.ஆர்., எனும், தொழிற்சாலைகளின் சமூக பொறுப்புணர்வு நிதிக்கு ஒதுக்கி, சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் சி.எஸ்.ஆர்., நிதியில், 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளளது. இதில் நான்கு சதவீதம் மட்டுமே, கொரோனா நிவாரணத்துக்காக பிரதமர் மோடி துவக்கிய, ‘பி.எம்., … Read more

ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 3ஆம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேதி மங்கலம்’ என்றும், இறைவன் பெயர் ‘வடதளி உடையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திட்டத்தில் இத்திருக்கோயிலின் சுவாமி, அம்பாள், ஆறுமகர் விமானங்கள் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாசிமகத்தில் பெருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் … Read more

நாளைய மின் நிறுத்தம்| Dinamalar

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைவில்லியனுார் – மரப்பாலம் மின் பாதையில் பராமரிப்பு பணி: தக்ககுட்டை, திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், மூலகுளம், உழவர்கரை, அன்னை தெரசா நகர், நண்பர்கள் நகர், பாலாஜி நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர்.தேவா நகர், வயல்வெளி ,செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், தட்சிணாமூர்த்தி நகர்.ராமலிங்கம் நகர், அணக்கரை, புது நகர், ரெட்டியார்பாளையம் … Read more

தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரும் மனு விரைவில் விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,  தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரும் மனுக்கள் ஓராண்டுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளன.  சுங்கவரி துறையினரின் சோதனையை தவிர்க்கும்வகையில் ரூ.40 கோடி, தேர்தல் நிதி பத்திரத்தின் வாயிலாக செலுத்தப்பட்டுள்ளது. … Read more

மானியக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது

சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.  இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,182,612 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,182,612 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 493,738,960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 429,313,463 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 55,387 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.