மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை ஓரம் கட்டும் முயற்சியாக,  எதிர்க்கட்சி தலைவர்களை முதலவர்  சந்திரசேகரராவ் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக … Read more

சென்னையில் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராகும் 5 லட்சம் இளைஞர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி யில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி யில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுவதால் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக உள்ளனர். இந்த … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைப்பகுதியில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வனத்துறையினர் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சின்ன சின்னதாய்| Dinamalar

சின்ன சின்னதாய்இயேசு சிலை அகற்றம்முல்பாகலின் கோகுண்டே கிராமத்தில் சிறிய மலை உள்ளது. இது அரசு நிலம். இதில் 25 ஆண்டுகளுக்கு முன் 20 அடி உயர இயேசு சிலை நிறுவப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி முல்பாகல் தாலுகா தாசில்தார் சோபிதா தலைமையில் போலீசார் உதவியுடன் அகற்றும் பணி நேற்று துவங்கியது. இக்கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 1,100 கிறிஸ்துவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இயேசு சிலை அகற்றியதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கல்வி உதவித் தொகைஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் … Read more

‘இந்திய பொருளாதாரம் வேகமாக வளருகிறது’ – நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி,  2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் வளர்ச்சி விகிதம் உந்தப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், “உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களால், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும். பன்னாட்டு நிதியம், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியை முந்தைய கணிப்பை விட குறைத்துள்ளது. ஆனால், இந்திய பொருளாதார வளர்ச்சியை … Read more

குட் நியூஸ்: பிக்சட் டெபாசிட் வட்டியை 2வது முறை உயர்த்தியது ஹெச்டிஎப்சி வங்கி..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சிக்குக் கொள்கை அடிப்படையிலான தளர்வுகள் தேவையை என்பதைச் சுட்டிக்காட்டி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்திலும் மாற்றங்களை அறிவிக்காமல் பழைய வட்டி விகிதத்தையே 10வது முறையாக அமலாக்கம் செய்துள்ளது. இதனால் வங்கிகளில் கடன், வைப்பு நிதியில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பொதுத்துறை வங்கிகளைத் தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஹெச்டிஎப்சி வங்கி வைப்பு நிதிக்கான … Read more

IND vs WI: `Born to Pull' ரோஹித்; ஃபினிசிங் குமாராக மாறிய சூர்யகுமார்! என்னாச்சு இஷன் கிஷன்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஓடிஐ தொடரை முழுமையாக வென்ற நிலையில் டி20 தொடரின் முதல் போட்டியையும் இந்தியா சிறப்பாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கத்தில் அதிரடி காட்ட, சூர்யகுமார் யாதவ் அற்புதமாக போட்டியை முடித்து வைத்தார். அறிமுக வீரரான ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றார். கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா … Read more

தமிழ்ப்பெண்ணுக்கும் அவுஸ்திரேலிய பிரபலத்துக்கும் திருமணம்! தமிழ் பாரம்பரிய பத்திரிக்கை கசிந்ததையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சனை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமண பத்திரிக்கை இணையத்தில் கசிந்தது அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது. மேக்ஸ்வெல்லின் நிகர சொத்து மதிப்பு ரூ 218 கோடி (இலங்கை மதிப்பில்) என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து … Read more

மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்கலாம்! மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு கடிதம்…

டெல்லி: மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆராய மாநிலஅரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 90சதவிகிதம் அளவிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். … Read more

221 புள்ளிகளுடன் உயர்ந்த மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 57,996.68 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 221 புள்ளிகள் உயர்ந்து 58,217.69 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தற்போது 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 117.11 புள்ளிகள் சரிந்து 57,879.57 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 7.60 புள்ளிகள் சரிந்து 17,314.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆக்சிஸ் வங்கியின் புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. … Read more