ஹிஜாப் தடையின் ஹீரோ.. தேர்தலில் மண்ணை கவ்வினார்.. சம்பவம் செய்த கர்நாடக மக்கள்.!

கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை அறிவித்த பாஜக அமைச்சர் சொந்த தொகுதியில் தோல்வியை தழுவினார். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இது வரை 178 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி 108 இடங்களிலும், பாஜக 50 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 51 தொகுதிகளில் 33 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 14 … Read more

Rahul Gandhi: எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்… வெற்றி குஷியில் ராகுல் கூறியது என்ன?

Rahul Gandhi: கர்நாடகாவில் வெறுப்பின் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என அம்மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது: தேர்தல் வெற்றிக்குப் பின் ராகுல் காந்தி பேட்டி

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கர்நாடகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தோடு ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: … Read more

ராகுல் காந்தி சர்ப்ரைஸ்… அந்த 5 வாக்குறுதிகள் எப்போது? கர்நாடகா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகா தேர்தலில் வெற்றிக்கு உழைத்த கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகள். என் இதயத்தில் இருந்து அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. நாங்கள் ஏழை மக்களுக்கான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023 வெறுப்புணர்வின் கதவுகள் மூடப்பட்டு விட்டன. அன்பின் கதவுகள் கர்நாடகாவில் திறக்கப்பட்டுள்ளது. … Read more

3 ஆண்டுகள் தூக்கமில்லை… கண்ணீர் விட்டு கதறிய டி.கே. சிவகுமார் – கிடைக்குமா முதல்வர் அரியணை?

Karnataka Election Result DK Shivakumar:  கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸின் முன்னிலையையொட்டி அக்கட்சியின் மாநில தலைவர் ஆழந்த கண்ணீர் வடித்தார். 

கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு இறுதிவரை பதிலளிக்க மறுத்த சித்தராமையா..!

கர்நாடகத் சட்டமன்றத் தேர்தல் வெற்றி மக்களவைத் தேர்தலுக்கான அடிக்கல் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், பாஜக அரசின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தொண்டர்களிடையே ஊக்கமளித்ததாக கூறிய அவர், பண பலத்தால் பாஜக தேர்தலில் வெற்றி பெற நினைத்ததாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் … Read more

Karnataka Election Results | 2 மணி நிலவரம்: காங்கிரஸ் 126 தொகுதிகளில் முன்னிலை – 10 தொகுதிகளில் வெற்றி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 126 தொகுகளில் முன்னிலை வகித்து வருகிறது. 10 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 2 மணி நிலவரம்: மதியம் 2 மணி நிலவரப்படி, காங்கிஸ் கட்சி 126 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் … Read more

சொல்லுங்க 'ஜெய் பஜ்ரங் பலி'… பாஜக இல்லாத தென்னிந்தியா.. சம்மட்டி அடி..!

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10 ஆம் தேதி பொதுதேர்த்தல் நடந்தது. இந்நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11.55 மணி நிலவரப்படி காங்கிரஸ் 118 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், ஜேடிஎஸ் 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரசின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஜெய் பஜ்ரங் பலி அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் … Read more

வெற்றி தோல்வி என்பது பாஜகவுக்கு புதிதல்ல! விரைவில் மீண்டு வருவோம்: பசவராஜ் பொம்மை

CM For Karnataka: 113 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை நோக்கி காங்கிரஸ் முன்னேறிச் செல்லும் நேரத்தில், தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பாஜகவின் பிடியில் இருந்த கர்நாடகாவில் பாஜகவின் பிடி தளர்கிறது

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஒரே சீருடை அணிய ஏற்பாடு!

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஒரே சீருடை அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசும்போது, மழைக்கால கூட்டத் தொடருக்கு முன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்காக அழைப்பாளர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆயத்தப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இரு அவை உறுப்பினர்களுக்கான சீருடைகளை தேசிய பேஷன் டெக்னாலஜி … Read more