கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் … Read more

இந்தியாவில் மீண்டும் 10,000-ஐ கடந்த அன்றாட கோவிட் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,542 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது முந்தைய நாள் தொற்றைவிட 38 சதவீதம் அதிகமாகும். இதனால் நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 63,562 ஆக அதிகரித்துள்ளது. மீண்டும் 10,000-ஐ கடந்தது: முன்னதாக திங்கள் கிழமை தொற்று பாதிப்பு 9.111 என்றும் செவ்வாய்க்கிழமை பாதிப்பு 7,633 என்றும் இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மீண்டும் 10 ஆயிரத்தைக் … Read more

எகிறும் கேஸ் சிலிண்டர் விலை; கர்நாடக தேர்தலில் பாஜக அவுட்… வியூகம் ரெடி… குஷியில் எதிர்க்கட்சிகள்!

கர்நாடகாவில் அரசியல் சூடு அனல்பறக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், கட்சிகளின் வியூகம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவை எப்படியாவது தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் கிங் மேக்கர் அந்தஸ்தை இழந்துவிடக் கூடாது என ஒக்கலிகா வாக்குகளையும், ஓல்டு மைசூரு மண்டலத்தையும் குறிவைத்திருக்கிறது மதச்சார்பற்ற ஜனதா தளம். கேஸ் சிலிண்டர் விலை இந்நிலையில் அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பதில் எந்தெந்த … Read more

அத்தீக் அகமது கடிதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்: வழக்கறிஞர் தகவல்

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீஸார் கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 3 பேர் அவர்களை சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் அத்தீக் அகமதுவின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா நேற்று கூறியதாவது. தான் கொல்லப்பட்டாலோ அல்லது விபத்தில் சிக்கி இறக்கும் நிலை வந்தாலோ தான் கைப்பட எழுதியுள்ள கடிதத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உத்தரபிரதேச முதல்வருக்கும் அனுப்புமாறு அத்தீக் அகமது … Read more

இந்தியாவின் முதல் பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோர் திறப்பு..!!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் பிரத்யேக ஸ்டோரை ஆப்பிள் மும்பையில் திறந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோரை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் திறந்து வைத்துள்ளார்.இந்த ஆப்பிள் ஸ்டோர் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் உலக சந்தையில் அறிமுகம் செய்யும் சாதனங்களை பயனர்கள் உடனடியாக பெறலாம் எனத் தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் … Read more

இந்த 9 மாநிலங்களில் 3 நாட்கள் வெப்ப அலை தொடரும்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கங்கை நதிக்கு தெற்கே உள்ள மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் பீகார் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை தொடரும். அதேபோல் சிக்கிம், ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரம் வரை வெப்ப அலை நீடிக்கும். ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள், ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். கடந்த 6 … Read more

உ.பி போலீஸாருக்கு சவால்: தலைமறைவான அத்தீக் மனைவி சாயிஸ்தா, சகா குட்டு முஸ்லிமினை கைது செய்ய தீவிரம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா அரசியல்வாதி அத்தீக்கின் மனைவி சாயிஸ்தா பர்வீன், அத்தீக்கின் சகாவான குட்டு முஸ்லிம் தலைமறைவு தொடர்கிறது. இருவரையும் கைது செய்வது உபி காவல்துறைக்கு பெரும் சவாலாகி விட்டது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜுபால் வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் 10 குற்றவாளிகளில் அத்தீக், அஷ்ரப், சாயிஸ்தாவுடன் குட்டு முஸ்லிமும் இடம் பெற்றுள்ளார். இவர் வீசிய குண்டால் தான் உமேஷ்பாலின் பாதுகாவலர் கொல்லப்பட்டார். குட்டு முஸ்லிம் … Read more

மக்கள் மருந்தகத்துக்கு ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு: மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

கோவா: மக்கள் மருந்தகத்துக்கு ஜி20 பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்ததாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஜி20 சுகாதார செயலாக்க கூட்டம் கோவா மாநிலம் பன்ஜிம் நகரில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு இடையே ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கோவாவில் செயல்படும் மக்கள் மருந்தகத்தை மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் … Read more

டெலியோஸ்-2 செயற்கைக்கோள் ஏப்.22ல் விண்ணில் ஏவப்படும்

சென்னை: சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் ஏப்.22 மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். டெலியோஸ்-2 செயற்கைக்கோள் புவி ஆய்வுக்கு பயன்படும். இந்நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி … Read more

சபரிமலையில் ரூ.4,000 கோடியில் புதிய விமான நிலையம் – மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி

புதுடெல்லி: சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. இது ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்கு … Read more