ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டை பூட்டு போட முடிவு – ஏன் தெரியுமா?

ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக ரயில்களுக்கு சிக்னல் வழங்கும் பேனல் அறைகளுக்கு இரட்டை பூட்டு போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அரபிக்கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜாய்… கட்ச் மற்றும் கராச்சி இடையே ஜூன் 15ல் கரை கடக்க வாய்ப்பு..!

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜோய், குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே வரும் 15ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அந்த புயல் மையம் கொண்டுள்ளதாகவும், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்பகுதியில் தேசிய … Read more

குஜராத் | ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள 4 பேர் கைது

அகமதாபாத்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்)போலீஸார் கைது செய்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்கேபி (கோரசான் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட்) ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏடிஎஸ் போலீஸார் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர். இதில் போர்பந்தரில் இருந்து மீன்பிடி படகில் செல்ல முயன்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் மூவரும் ஜம்மு … Read more

மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்.. “தந்தையை போல் கொள்கையில் உறுதியாக இருப்பேன்” – சச்சின் பைலட்

மக்களின் நம்பிக்கை தான் தனது மிகப்பெரிய சொத்து என்றும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தௌசாவில் தனது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் சிலையை திறந்து வைத்து பேசிய சச்சின் பைலட் இவ்வாறு கூறினார். ராஜஸ்தானில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அரசு பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தனது தந்தை எந்த நிலையிலும் கொள்கை மாறியதில்லை என கூறிய சச்சின் … Read more

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்: கெஜ்ரிவால்

புதுடெல்லி: மத்திய அரசின் அவசரச் சட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளுநரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆளுநரின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு அளிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் … Read more

விதிமீறி ரூ.5,551 கோடி பரிவர்த்தனை – சீன மொபைல் நிறுவனத்துக்கு அமலாக்க துறை நோட்டீஸ்

புதுடெல்லி: அந்நிய பரிவர்த்தனை விதிகளை மீறி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.5,551 கோடி பரிவர்த்தனை செய்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஷாவ்மியின் இந்தியப் பிரிவு அந்நிய பரிவர்த்தனையில் விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு அமலாக்கத் துறை அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது. … Read more

உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய மக்கள் தாய் நாடு மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் – அமைச்சர் ஜெய்சங்கர்

உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய மக்கள் தாய் நாடு மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வாரணாசி சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில், இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த கருத்தரங்கில் பேசினார். வெளிநாடுகளில் நெருக்கடி காலங்களில் சிக்கிய இந்தியர்கள், தாய்நாட்டிற்கு மீட்கப்பட்டு வந்தது குறித்து எடுத்துரைத்தார். ரஷ்யா-உக்ரைன் போரின் தொடக்கத்தில், உக்ரைனிலிருந்து 90 விமானங்கள் மூலம் இந்தியர்கள் … Read more

10 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் 42 ஆண்டுகளுக்குப்பின் 90 வயது முதியவருக்கு ஆயுள் – உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு

ஃபிரோசாபாத்: உ.பி.யில் கடந்த 1981-ம் ஆண்டு 10 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில், 42 ஆண்டுகள் தாமதத்துக்குப்பின் 90 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தின் சாதுபூர் கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு, ரேஷன் கடை உரிமையாளர் ஒருவர் மீது, தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். உயர் வகுப்பைச் சேர்ந்த அந்த ரேஷன் கடை உரிமையாளர், புகார் கொடுத்த குடும்பத்தினரை பழிவாங்க முடிவு செய்தார். அனர் சிங் யாதவ் என்ற … Read more

பெண்களுக்கு இன்று முதல் இலவச பேருந்து சேவை…. ஸ்மார்ட் கார்டு வழங்கும் கர்நாடகா அரசு!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதுவும் 135 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தலில் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்திருந்தது. காங்கிரஸ் வாக்குறுதிகள் அவை, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3ஆயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 1,500 ரூபாய், … Read more

கர்நாடகா | பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் தொடக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் இன்று தொடங்கப்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் கர்நாடகா முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும், சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும், பெண்களின் வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்று … Read more