கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 : யார், யாருக்கு எத்தனை சீட்? வெற்றியும், கூட்டணியும்… ஓர் அரசியல் கணக்கு!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வெளிவந்த எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி சாதகமாக அமைந்துள்ளன. அதேசமயம் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கணக்கு போட தொடங்கியுள்ளது. கிங் மேக்கர் குமாரசாமி முதல்வர் நாற்காலி, முக்கிய துறைகள் உள்ளிட்ட கண்டிஷன்களுக்கு ஒத்து வந்தால் தான் கூட்டணி என குமாரசாமி தற்போதே கறார் காட்ட ஆரம்பித்து விட்டார். பாஜக, காங்கிரஸ் … Read more

“ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள “ஆபரேஷன் கை” திட்டத்தை கையில் எடுத்த காங்கிரஸ்

Karnataka Election Result 2023: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவிட்டால், பாஜகவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்க ஆபரேஷன் ஹஸ்தாவை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சந்திரபாபு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இரகவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசிய அவர், ஆந்திர அரசு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை எனக் கூறினார். , பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். Source link

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! 87.33% மாணவர்கள் தேர்ச்சி..!

பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் … Read more

பஞ்சாப் பொற்கோயில் அருகே 3-வது முறையாக குண்டுவெடிப்பு: 5 பேர் கைது – புலன் விசாரணை தீவிரம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே ஹெரிடேஜ் தெரு உள்ளது. இங்குள்ள பார்க்கிங் கட்டிடத்தில் கடந்த 6-ம் தேதி காலை குண்டு வெடித்தது. இது 200 கிராம் பட்டாசு ரசாயணத்தில் குளிர்பான கேனில் தயாரிக்கப்பட்ட குண்டு என விசாரணையில் தெரியவந்தது. அடுத்த 30 மணி நேரத்துக்குள், அதே பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. இது பார்க்கிங் கட்டிடத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீஸார் 1.10 கிலோ பட்டாசு மருந்தில் … Read more

வெளியாது CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

CBSE Results 2023: முக்கிய அறிவிப்பு!! சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதை எப்படி பார்ப்பது என்ற விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

கர்நாடகாவில் நாளை வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு..!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் … Read more

பாஜக, காங்கிரஸ் இரண்டும் எங்களை அணுகி உள்ளன: மதச்சார்பற்ற ஜனதா தளம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதால் பாஜகவும் காங்கிரசும் தங்களை அணுகி உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.22 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கு தொடர் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் … Read more

கர்நாடகா தேர்தலில் ஜேடிஎஸ் ஆதரவுக்கு போட்டி போடும் பாஜக, காங்கிரஸ்.. கிங் மேக்கராகும் குமாரசாமி!

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாவதை முன்னிட்டு, மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் (ஜேடிஎஸ்) ஆதரவை பெற பாஜகவும், காங்கிரஸும் குமாரசாமியின் வீட்டின் முன்பு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம் என குமாரசாமி தரப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் , ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளிடையே அங்கு மும்முனை போட்டி நடைபெற்றது. … Read more

EC: தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட EVM கர்நாடக தேர்தலில்? வதந்திக்கு நடவடிக்கை அவசியம்

Karnataka Election 2023: கர்நாடகாவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டன என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.