எஸ்பிஜி பாதுகாப்பு | முன்னாள் பிரதமர்களை சேர்க்கும் ஆலோசனையை நிராகரித்தார் ராஜீவ் காந்தி – டி.என்.சேஷன் சுயசரிதையில் தகவல்

புதுடெல்லி: எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் முன்னாள் பிரதமர்களை சேர்க்க வேண்டும் என்ற ஆலோசனையை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நிராகரித்தார் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது. டி.என்.சேஷனின் சுயசரிதை நூல் ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வகை செய்யும் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டம் 1988-ல் அமலுக்கு வந்தது. முன்னதாக, இதற்கான … Read more

சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது

போர்பந்தர்(குஜராத்): சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் கடற்கரை நகரான போர்பந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களின் செயல்பாடு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை போர்பந்தர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச பயங்கரவாத … Read more

2022-ல் சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்: மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த ஆண்டு சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் MyGovIndia வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் 8.95 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்னையில் முன்னணியில் இருக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு 2.92 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை … Read more

ஒடிசா ரயில் விபத்து | சிபிஐ விசாரணை முடியும் வரை பஹானாவில் ரயில்கள் நிற்காது

பாட்னா: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்த சிபிஐ விசாரணை முடியும் வரை விபத்து நடந்த பஹானா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பஹானா ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் அந்த வழியாக … Read more

அதிர்ச்சி.. ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்.. சிபிஐ வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

புவனேஸ்வர்: சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த ஒடிசா ரயில் விபத்துக்கான காரணத்தை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான பரபரப்பு அறிக்கையையும் அது வெளியிட்டிருக்கிறது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜூன் 2-ம் தேதியை இந்தியாவில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அன்றைய தினம் இரவு ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்து நாட்டையை உலுக்கியது. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி பக்கத்து தண்டவாளத்தில் தடம்புரண்டது. … Read more

நாயை வெட்டி… மான் கறி என சொல்லி விற்ற இளைஞர்கள் – வாங்கி தின்ற 'அப்பாவி' மக்கள்!

Bizarre News: நாயை கொன்று அதை மான் இறைச்சி என கூறி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகராறால் விமான நிலையத்தில் பெண் விபரீத முயற்சி… பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்பு

ஐதராபாத் விமான நிலைய மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண் பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற பெண் பெங்களூரை சேர்ந்த சுவேதா என்பவர் ஆவார். ஐதராபாத்தில் இருந்து தமது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு திரும்புவதற்காக ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது, அவரது ஆண் நண்பருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றதார். அங்கு வந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அந்த பெண்ணை … Read more

தேசியவாத காங்கிரஸ் துணைத் தலைவராக சரத் பவார் மகள் சுப்ரியா சுலே நியமனம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரியா சுலே நியமிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி அரசியல் தீவிரமடைந்து காணப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டியதால் சர்ச்சை எழுந்தது. கட்சிக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி தலைமைப் பொறுப்பை தன் வசப்படுத்த அஜித் பவார் மேற்கொண்ட முயற்சியாக அது பார்க்கப்பட்டது. இந்த விவகாரத்தின் பின்னணியில், கட்சித் … Read more

IAS vs IPS: யாருக்கு அதிகாரம் அதிகம்…!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்  ஆகிய இரு சேவைகளில் அதிக அதிகாரம் கொண்டது எது, அதிக பொறுப்புகள் உள்ளது எது, அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் கொண்டது எது என பொது மக்களிடையே அடிக்கடி ஒப்பீடு மற்றும் விவாதம் நடைபெறுகிறது.

ஒடிசா ரயில் விபத்து நேரிட்ட பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல் வைத்த சிபிஐ அதிகாரிகள்..!

ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகுதியான பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கொடுக்கும் பேனலுக்கு சீல் வைத்து லாக் புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளனர். அந்த ரயில் நிலையம் முழுமையாக சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. விசாரணை தொடரும் நிலையில், அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை அங்கு ரயில்கள் நின்று செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே, … Read more