மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; காயம் 27

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் மும்பை – புனே நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர் 27 பேர் காயமடைந்தனர். இது குறித்து விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே கூறுகையில், “தனியாருக்குச் சொந்தமான பேருந்தில் பாரம்பரிய இசைக்குழு கலைஞர்கள் பயணித்தனர். அவர்கள் அனைவரும் புனேவில் ஒரு நிகிழ்ச்சியை முடித்துக் கொண்டு மும்பை சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் … Read more

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தையை தத்தெடுக்க உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ஜகான் அன்சாரி (47). விவாகரத்து பெற்ற அவர், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில்உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். மகாராஷ்டிர மாநிலம் ஜல் கோன் பகுதியை சேர்ந்த தனது தங்கை கெய்சர்ஜகானின் 3 வயது மகள் அயத் பாத்திமாவை தத்தெடுக்க, ஷப்னம் ஜகான் முடிவு செய்தார். குழந்தையை தத்தெடுக்க சம்பந்தப்பட்ட அரசுஅதிகாரிகளிடம் அவர் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பூஷாவல் மாவட்ட நீதிமன்றத்தில் ஷப்னம் ஜகான் அன்சாரி மனு தாக்கல் … Read more

COVID-19 in India: தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை, அடுத்த அலையின் அறிகுறியா?

Coronavirus: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இது மக்களையும் அதிகாரிகளையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது தெரியுமா ? ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்..!!

மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது டுவிட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் டுவிட் செய்ய முடியும். ‘டுவிட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் டுவிட் செய்ய முடியும். இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் டுவிட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த டுவிட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் … Read more

அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 19 ஆண்டுகள் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார். அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ராகுல் காந்தி அரசு பங்களாவை ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என … Read more

ராணுவ நிலம் மோசடியாக விற்பனை – ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகாரி உட்பட 7 பேர் கைது

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி யில் ராணுவத்துக்கு சொந்தமான இடம் உட்பட பல ஏக்கர் நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், பிஹார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சுமார் 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது ஜார்க்கண்ட் மாநில சமூக நலத்துறை இயக்குநர் சாகவி ரஞ்சன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியான அவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்து 10 பைகளில் முக்கிய ஆவணங்களை … Read more

மம்தா அரசு கவிழும்: அமித் ஷா சொன்ன ஆருடம் – பின்னணி என்ன?

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டம் சூரியில் பாஜக அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா மம்தா அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், ‘மேற்கு வங்கத்தில் மம்தாவின் … Read more

புல்வாமா தாக்குதலில் ஆதாயம் தேடிய மோடி? பரபரப்பு குற்றச்சாட்டு!!

புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்றும், அதுகுறித்து பேசக்கூடாது என்று பிரதமர் மோடி அப்போது வற்புறுத்தியதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அளித்த நேர்காணலில் அவர் இதை கூறியுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேர்காணலில், 2019ஆம் ஆண்டு புல்வாமாவில் மத்திய ரிசர்வ் படை கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காரணம் … Read more

கருணை மனுக்களை முடிவு செய்வதில் ஏற்படும் தாமதத்தை சாதகமாக்கும் மரண தண்டனை குற்றவாளிகள் – உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘‘கருணை மனுக்களை முடிவு செய்வதில் ஏற்படும் நீண்ட தாமதத்தை, மரண தண்டனை குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் சகோதரிகள் இருவர் 13 குழந்தைகளை கடத்தி, அதில் 9 பேரை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டுஉத்தரவிட்டது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு சரியே என உச்ச நீதிமன்றம் … Read more

30 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய பிட்புல் நாய்..!!

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கரண் சர்மா (30). விவசாயம் செய்து வரும் இவர் வழக்கம் போல தனது வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் சுற்றித் திரிந்த பிட்புல் வகை நாய் ஒன்று கரணை நோக்கி பாய்ந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கரண், நாய்யை குச்சி மூலம் அடித்து விரட்ட முயன்றுள்ளார். அப்போது அந்த நாய் அவரது அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த … Read more