பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100% விலக்கு! தமிழ் புத்தாண்டு தள்ளுபடி

Exemption In Stamp Duty: தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிலத்தை வாங்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100 சதவீதம் விலக்கு அளித்துள்ளது இந்த மாநிலம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பெறப்படும் என்று முன்னதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கால அவகாசத்தை நீட்டிக்கமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான … Read more

உ.பி. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன், கூட்டாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவனது கூட்டாளி குலாம் ஆகியோர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த 2007-ம் ஆண்டு கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் … Read more

மாநில முதல்வர்களிலேயே ஏழ்மையானவர் இவர் தான் – ஆய்வில் தகவல்..!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள முதல்வர்களின் சொத்து விவரங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதல்வர்கள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 28 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதல்வர்களின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், மிக ஏழ்மையான முதல்வர்யாக மேற்கு வங்காள … Read more

நீட் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா? உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு..!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வினை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2023 – 24 ஆம் ஆண்டிற்கான நீட்தேர்வு … Read more

ஜாலியன்வாலாபாக் நினைவுநாளில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட ரவுலட் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் … Read more

ஒரே நாளில் 10,158 பேருக்கு தொற்று உறுதி!!

இந்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,86,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 5,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,42,10,127 பேர் … Read more

உடனே விண்ணப்பிங்க..!! சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் வேலை..!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (Central Coalfields Limited – CCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 330 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பதவி பெயர்: மைனிங் சர்தார், எலக்ட்ரீசியன், துணை சர்வேயர், உதவி போர்மேன் (மின்சாரம்) காலிப்பணியிடங்கள்: 330 (மைனிங் சர்தார் – 77, எலக்ட்ரீஷியன்/ டெக்னீஷியன் – 126, துணை சர்வேயர் -20, உதவி போர்மேன் – … Read more

மத்திய அரசுப் பணிகளில் சேர 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை – பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

புதுடெல்லி: மத்திய அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு, பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் வழங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த திட்டத்தின்படி, மத்திய அரசின் துறைகளுக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் … Read more

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 20-ம் தேதி உத்தரவு

சூரத்: ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், வரும் 20-ம் தேதி உத்தரவு வழங்கப்படுகிறது. 2019-ல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை … Read more