கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு

கர்நாடகா தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ஆம் தேதி எண்ணப்படுகின்றன மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவானது Source link

ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு!!

ஜீன்ஸ் பாக்கெட்டில் இளைஞர் ஒருவர் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஹரிஸ் ரகுமான் (23) என்ற இளைஞர் கோழிக்கோட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இளைஞரின் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. ஹரிஷ் ரகுமான் உடனடியாக தீயை அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு லேசான தீக்காயம் … Read more

கேரளா | பெண் மருத்துவர் குத்திக் கொலை: பரிசோதனைக்கு வந்த கைதி துணிகரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இளம் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துவரப்பட்ட கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்தவர் வந்தனா தாஸ் (23). இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இந்த மருத்துவமனைக்கு போலீஸாரால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட சந்தீப் என்ற கைதி கத்திரிக்கோலால் வந்தனா தாஸை தாக்கியுள்ளார். எதிர்பாராத இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிதெரியாத பயிற்சி மருத்துவர் தாக்குதலில் … Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023: சண்டை, விதிமீறல், அடித்து நொறுக்கல்… எதிர்பாராத 4 சம்பவங்கள்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுவிடும். வாக்குப்பதிவு அமைதியாக தொடர்ந்த நிலையில் எதிர்பாராத சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன. இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. மாண்டியா மாவட்டத்தில் உள்ள நாராயணபுரா கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ரைதா சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், அத்துமீறி … Read more

கர்நாடக தேர்தல் 2023: எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குப்பதிவு? முழு விவரம்

கர்நாடக தேர்தல் 2023: கர்நாடகாவில் மதியம் 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குப்பதிவாகி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் “கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் விமான சேவை வரும் 19ம் தேதி வரை ரத்து”

நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் வரும் 19ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் உடனடி தீர்வு மற்றும் செயல்பாடுகளின் மறுமலர்ச்சிக்காக தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம், விரைவில் முன்பதிவுகளை மீண்டும் தொடங்குவோம் எனக் … Read more

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை பார்க்க முடியாது: பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த விழாவில் பிதமர் பேசியாதாவது: “நான் இன்று ரூ.5,500 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு … Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தல் எக்ஸிட் போல் 2023 முடிவுகள்: எங்கு, எப்படி பார்ப்பது?

தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் அக்கட்சிக்கு மட்டுமின்றி காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கும் ஓர் அக்னி பரீட்சை ஆகும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத … Read more

கர்நாடக தேர்தல் 2023: திருமண மண்டபத்தில் இருந்து நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்த புதிய மணமக்கள்

கர்நாடக தேர்தல் 2023: திருமணத்திற்குப் பிறகு நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்த புதிய மணமக்கள். தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏற்ப மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவும் கர்நாடகாவில், சுயேச்சைகள் உட்பட மொத்த ம் 2,615 பேர் வேட்பாளர்களாக களம் … Read more