எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பாஜ, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளிடையே வலுவான போட்டி இருந்தாலும், இதில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) ‘பஞ்சரத்னா’ என்ற அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாய … Read more

டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு – திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்பு

சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப். 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளது. அவர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றுகிறார். டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க … Read more

சிபிஐ 60ம் ஆண்டு விழா பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ், சிபிஐ அமைப்பு கடந்த 1963ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட்டது.   சிபிஐ.யின் 60ம் ஆண்டு விழா டெல்லி விக்யான் பவனில் இன்று நடைபெறுகிறது.  பிரதமர் மோடி பங்கேற்று விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், ஷில்லாங், புனே, நாக்பூர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். சிபிஐ வைர விழா ஆண்டின் நினைவாக தபால்தலையையும் வெளியிட உள்ளார். அத்துடன், சிபிஐ அமைப்பின் … Read more

சகோதரன் கள்ளத்தொடர்பால் ஐடி ஊழியர் காரோடு எரித்துக் கொலை..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (35). ஐடி ஊழியரான இவர் தற்போது ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இதனிடையே, நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற சகோதரன் (தம்பி) உள்ளார். புருஷோதமனுக்கும் அதேகிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொடர்பு குறித்து அறிந்த ரிபிஜெயா தன் மனைவியுடனான கள்ளத்தொடர்பை முறித்துக்கொள்ளும்படி புருஷோதமனிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரிபிஜெயாவுக்கும் புருஷோதமனுக்கும் இடையே மோதல் … Read more

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு

சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) மேல்முறையீடு செய்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி(52) பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார். வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் … Read more

அமலாக்கத்துறை சோதனை சட்டீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில்,‘‘ கடந்த ஒரு மாதமாக அமலாக்கத்துறை மாநிலத்தில் சோதனை நடத்தியது.  50  இடங்களில் நடத்திய சோதனையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த 29ம் தேதி ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபார், அவருடைய சகோதரர் அன்வர், மதுபான ஆலை அதிபர் பல்தேவ் சிங் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட இந்த சோதனைகள்  … Read more

‘எங்க ஊருல வந்து பேசிப் பாருங்க’மிரட்டல் விடுத்த அசாம் முதல்வர் விருந்துக்கு அழைத்த கெஜ்ரிவால்

கவுகாத்தி: அசாம் சென்ற டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவதூறு வழக்கு தொடருவதாக தனக்கு மிரட்டல் விடுத்த அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவை மதிய விருந்துக்கு அழைத்து பதிலடி தந்துள்ளார். அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘  என் மீது ஊழல் வழக்கு இருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகிறார்.  ஏப்ரல் 2ம் தேதி அசாம் வரும் அவர் இங்கு வந்து என்னை ஊழல்வாதி என்று சொல்லட்டும். அடுத்த நாளே, மணீஷ் … Read more

திருப்பதியில் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். இதனால் தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன்படி, சனிக்கிழமையான நேற்று முன்தினம் 75 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 36 ஆயிரத்து 272 பக்தர்கள் தலைமுடியை … Read more

தம்பியின் தகாத உறவால் வந்த விபரீதம் சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் எரித்துக்கொலை

திருமலை: திருப்பதியில் தம்பியின் தகாத உறவால் நள்ளிரவு சாப்ட்வேர் இன்ஜினியர் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி அடுத்த கங்குடுப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது. இதில் ஒரு வாலிபர் கருகி பலியாகி இருப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்தது. பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, … Read more

மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வருக்கும் தொடர்பு: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்  ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் … Read more