மணிப்பூரில் தொடர்ந்து கலவரம்… நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைப்பு..!!
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், அங்குள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, பல்வேறு மாவட்டங்களில் கலவரமாக உருவெடுத்தது. கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.. கலவரத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். … Read more