ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்: பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை (மார்ச் 29) தெரிவித்தார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடகா தேர்தல் தொடர்பாக புதன்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “அது பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்” … Read more