முதல்முறையாக நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை..!! எங்கு தெரியுமா ?

பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரமதர் மோடி மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் தொடங்கி வைத்தார். இருப்பினும், அதிக விலைக் கட்டணங்கள் காரணமாக, முதல் நாளிலிருந்தே … Read more

காங்கிரஸ், பாஜக, மஜத, சுயேச்சைகள்‌ 185 பேர் போட்டி – கர்நாடக சட்டப்பேரவைக்குள் நுழையும் 10 பெண் எம்எல்ஏக்கள்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 185 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 10 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். கர்நாடகாவில் நடைபெற்ற 16-வது சட்டப்பேரவைத் தேர்தலில் 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ், பாஜக, மஜத, சுயேச்சை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக‌ 185 பெண்கள் களத்தில் இருந்தனர். ரூபா கலா 2-வது முறையாக…: இதில் காங்கிரஸ் சார்பில் பெலகாவி ஊரகத் தொகுதியில் போட்டியிட்ட லட்சுமி ஹெம்பல்கர், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட ரூபா கலா, … Read more

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு உதவி செய்த 3 பேர் கைது – ஒடிசா காவல் துறை நடவடிக்கை

ஜாஜ்பூர்: வெவ்வேறு பெயர்களில் சிம் கார்டுகள் வாங்கி அவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட ஒருமுறை கடவுச்சொற்களை (ஓடிபி) பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிர்ந்ததாக குற்றம்சாட்டி, 3 பேரை ஓடிசா காவல் துறையின் சிறப்புக் குழு கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 19 மொபைல் போன்கள், 47 சிம்கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள்,லேப்டாப்கள் கைப்பற்றப்பட் டுள்ளன. இவர்கள் மூவரும், ஒடிசாவில் உள்ள கடைகளில் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டையைக் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். அதன் மூலம், மின்னஞ்சல், சமூக வலைதளம், … Read more

கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமனம்

புதுடெல்லி: கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நேற்று நியமிக்கப்பட்டார். மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது. இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் நேற்று காலையில் … Read more

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? – ஆலோசனையில் பங்கேற்க டெல்லி விரைந்தார் சித்தராமையா

புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா டெல்லி விரைந்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. எனினும், முதல்வர் பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும், மூத்த தலைவர் சித்தராமையாவும் போட்டி போடுவதால், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த … Read more

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 184 மீனவர்கள் குஜராத் வந்தடைந்தனர்

அகமதாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களில் 184 பேர் குஜராத் வந்தடைந்தனர். அரபிக்கடலில் குஜராத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு தூதரக ரீதியில் நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள 198 … Read more

சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்… நான் சிறுபிள்ளை இல்லை – டிகே சிவகுமார் கொடுத்த ட்விஸ்ட்!

Siddaramaiah vs DK Shivakumar: தான் யாரையும் பிளாக் மெயில் செய்ய மாட்டேன் என்றும் தனக்கு என்று சுய அறிவு உள்ளதாகவும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, சிவக்குமார் இடையே கடும் போட்டி

கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை 135 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் ஒப்படைத்து ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதிதாகத் தேர்வான எம்.எல்ஏக்களுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பு ஆதரவாளர்களும் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே நின்று கோஷமிட்டனர். இரு தரப்பினரிடையே சுவரொட்டி யுத்தமும் … Read more

இம்மாத இறுதிக்குள் கோரிக்கையை ஏற்க வேண்டும்: ராஜஸ்தான் அரசுக்கு சச்சின் பைலட் கெடு

ஜெய்ப்பூர்: தனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட நடைபயணம் இன்று நிறைவடைந்தது. ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த வியாழக்கிழமை நடைபயணத்தைத் தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நிறைவு செய்தார். இந்த 5 நாள் நடைபயணத்தின்போது தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் அவர் நடந்து … Read more

காங்கிரஸ்-க்கு ஆரம்பித்த தலைவலி.. நீதிமன்றம் சம்மன்.. டெரர் அமைப்பை நோண்டியதால் வினை.!

இந்துத்துவ அமைப்பை அவமதித்தாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடகா தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. அதையடுத்து மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்க உள்ளது. அதேபோல் பாஜக 66 இடங்களில் வென்று எதிர்கட்சியாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் … Read more