கர்நாடகா சட்டசபை தேர்தல்: யார் யாருக்கு எவ்வளவு சீட்?.. புதிய கருத்து கணிப்பு சொல்வது என்ன.?

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெரும் என புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடகா தேர்தல் கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. தென் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால், ஆட்சியை பிடிக்க அக்கட்சி பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. அதேபோல் மிக்க செல்வாக்கு உள்ள கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை … Read more

சோனியாவை ‘விஷப் பெண்’ என விமர்சித்த கர்நாடகா பாஜக எம்எல்ஏ; கட்சியை விட்டு நீக்க காங். வலியுறுத்தல் 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ‘விஷப்பாம்பு’ என விமர்சித்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சோனியா காந்தியை ‘விஷப் பெண்’என்றும், பாகிஸ்தான், சீன உளவாளி என்றும் விமர்ச்சித்துள்ளார். கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர்களும் வலுத்துவருகின்றன. முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் நடந்த … Read more

LGBTQI: தன்பாலின திருமணம் என்று அழைக்கலாமா? இல்லை திருமண சமத்துவ உரிமைகள் என்பது சரியா?

Same sex marriage Hearing At Supreme Court: இந்தியாவின் ஓரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் சுவாரசியமான வாதங்கள்… 

ஷீரடி சாய்பாபா கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த எதிர்ப்பு.. கோயில் காலவரையின்றி மூடப்படும் – ஷீரடி அறக்கட்டளை

மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்துவதை கண்டித்து வரும் 1 ஆம் தேதி முதல் கோயில் காலவரையின்றி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உள்ள இந்த கோயிலில் பாதுகாப்பு பணிகளை உள்ளூர் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 1ஆம் தேதி முதல் சாய்பாபா கோயில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் … Read more

6 ஆண்டுகளில் 183 என்கவுன்ட்டர்கள்: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை நடந்த 183 என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளது. ரவுடி அத்தீக் அகமது கொலை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் 3 பேர் கும்பல் சுட்டுக் கொன்றது. கடந்த ஏப்ரல் 15-ஆம் … Read more

12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்.. ஐடி ஊழியருக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பு.. பெங்களூர் பரிதாபங்கள்!

பெங்களூர்: 12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக ஐடி ஊழியருக்கு வாடகைக்கு வீடு தர மறுத்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பெங்களூரில் வீட்டு ஓனர்களின் அட்ராசிட்டி எல்லை மீறி செல்வதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் ஐடி தலைநகரமாக விளங்குகிறது பெங்களூர். பெரிய பெரிய வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் தங்கள் தொழிலை தொடங்க பெங்களூரைதான் முதலில் தேர்வு செய்கின்றன. இதனால் அங்கு ஐடி ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து … Read more

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம். பணி: டெக்னிக்கல் ஆபிசர், சயின்டிபிக் அசிஸ்டென்ட், டெக்னீசியன் மொத்த பணியிடங்கள்: 4,374 (நேரடி தேர்வு முறை – 4162, பயிற்சி திட்டம் – 212) கல்வித் தகுதி:இதற்கு விண்ணப்பிக்க B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ் … Read more

“இந்திய – சீன எல்லை பொதுவாக நிலையாகவே உள்ளது” – ராஜ்நாத்திடம் கூறிய சீன அமைச்சர்

புதுடெல்லி: இந்திய – சீன எல்லை பொதுவாக நிலையாகவே உள்ளது என்று இந்தியா வந்துள்ள சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷங்ஃபு தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நேற்று 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எல்லை ஒப்பந்தங்களை சீனா மீறுவதால் இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையும் பாதிக்கப்படுவதாக அவரிடம் … Read more

சர்ச்சுகளை இடிப்பதா..? மணிப்பூரில் பயங்கர கலவரம்.. ராணுவம் குவிப்பு.. ஷாக்கில் பாஜக அரசு!

இம்பால்: தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இன்று முதல்வர் பிரென் சிங் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி அரங்கையும், அவர் திறக்கவிருந்த இடங்களையும் மக்கள் தீக்கிரையாக்கி உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் பிரென் சிங் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக, மணிப்பூர், மேகாலயா, மிசோராம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே பாஜகவால் வடகிழக்கு மாநிலங்களில் காலூன்றவே … Read more

அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் 3-வது ஆண்டாக முதலிடம்

புதுடெல்லி: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. கடந்த 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. தமிழகத்துக்கு அடுத்ததாக ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடியும், மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியும் கடன் வாங்கி உள்ளன. இதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. 2020-21 நிதி … Read more