ஓடிடி பயனாளர்களுக்கு ஷாக்..!! அமேசான் பிரைம் சந்தா கட்டணம் திடீர் உயர்வு..!

பெருகி வரும் மொபைல்போன் மோகத்தால் இளைஞர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படங்களை பார்க்கவே விரும்புகின்றனர். இதனால் போட்டி போட்டுக்கொண்டு சர்வதேச ஓடிடி நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகள் செலவழித்து படங்களை வாங்கி வருகின்றனர். அதேபோல் தொலைக்காட்சிகளில் தொடர்களை பார்க்கும் காலம் மலையேறி போய், இப்போது ஓடிடி தளங்களில் வலை தொடர்களை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தகது. … Read more

வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள் : கர்நாடகாவில் வெற்றி யாருக்கு?.. பாஜகவா? காங்கிரஸா?

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. அதன்படி கர்நாடக தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் அதிகப்பட்சமாக காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி … Read more

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா, “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த 20ம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவம் நடந்து … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: கலவரம் நடக்கும்.. 'அமித்ஷா மீது FIR.?'.. நாங்க விடமாட்டோம்.!

காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அமித்ஷா மீது எஃப்ஐஆர் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே மீதமுள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு … Read more

Karnataka Election: ஜெகதீஷ் ஷெட்டரை மண்ணை கவ்வ வைக்க பாஜக திட்டம்! அமித் ஷா மீது புகரளித்த காங்கிரஸ்

Karnataka Election 2023: ஜெகதீஷ் ஷெட்டரை அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க திட்டமிட்டுள்ள பாஜக, அதற்கான காய்களை நகர்த்தினால் காங்கிரஸ் சும்மா இருக்குமா?

ஷார்ஜாவில், கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை கிரிசன் பெரேரா விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பாலிவுட் நடிகை கிரிசன் பெரேரா, ஷார்ஜா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இம்மாதம் ஒன்றாம் தேதி, வெப் தொடரில் நடிப்பதற்கான நேர்காணலுக்காக ஷார்ஜா சென்ற கிரிசன் பெரேராவிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி ஐக்கிய அரபு அமீரக போலீசார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் தனது மகள் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் மும்பை போலீசாரிடம் புகாரளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், ஒரே குடியிருப்பில் வசித்துவந்த ஆண்டனி பால் என்பவரின் தங்கைக்கும், கிரிசன் … Read more

மக்கள் அதிர்ச்சி..!! மீண்டும் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 45 பைசா உயர்வு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 45 பைசா உயர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 30 பைசா உயர்த்தப்பட்டதால், இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 75 பைசா உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் ரூ. 1000 முதல் ரூ.2000 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலக்கரி மற்றும் நிலக்கரியை சுத்தம் செய்வதற்கான அதிக செலவு காரணமாக மின்கட்டணம் … Read more

கர்நாடகா | காங்கிரஸ் குறித்த அவதூறு பேச்சு – அமித் ஷா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, டாக்டர் பர்மேஷ்வார், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வந்தனர். கர்நாடாகாவில் நடந்த பாஜக பேரணியில், காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை … Read more

ஏவுகணைக்கே டாட்டா காட்டிய ராணுவ வீரர்.. ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த பரிதாபம்.. என்ன நடந்தது?

போபால்: எதிரி நாட்டு ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுக்கே அசால்ட்டாக கல்தா கொடுத்த ராணுவ வீரர் ஒருவர், சாதாரண ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், நேரம் சரியில்லை என்றால் சாதாரண விஷயத்தில் கூட கோட்டை விடுவதை பார்த்திருப்போம். அதுபோல், நாம் தான் பலவற்றை பார்த்திருக்கிறோமே.. இந்த சிறிய விஷயம் என்ன செய்துவிட போகிறது என்ற எண்ணத்தில் … Read more

‘சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்’ – வெளியுறவுத்துறை தகவல்

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சூடானின் நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து, ‘ஆபரேஷன் காவிரி’ … Read more