சூடானில் இருந்து இந்தியர்கள் 360 பேர் தாயகம் வருகை!!

ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து 360 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை … Read more

பாக். மீது அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு: கோவாவில் பிலாவல் புட்டோவுடன் இருதரப்பு பேச்சுக்கு வாய்ப்பில்லை

புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிக்கலானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதால், கோவாவில் அடுத்தவாரம் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் கோவாவில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளதால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

குட் நியூஸ்..!! அடுத்து 2 ஆண்டுகளில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும்..!!

டெல்லியில் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, நாட்டில் அடுத்த 24 மாதங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என கூறியுள்ளார். இதன்படி, ரூ.1,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால், மருத்துவ உபகரணங்கள் பிரிவானது அடுத்த 5 ஆண்டுகளில், தற்போதுள்ள ரூ.89,957 கோடியில் இருந்து, ரூ.4,08,897 கோடியாக வளர்ச்சி … Read more

விரைவில் வருகிறது ஜியோ ஏர்ஃபைபர்..!! கேபிள்கள் இல்லாத புது வைஃபை..!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், வீடு மற்றும் அலுவலகங்களில் வைஃபைக்கான ஜியோ ஏர்ஃபைபர் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ( ஆர்ஐஎல் ) தலைவர் கிரண் தாமஸ், அடுத்த சில மாதங்களில் #JioAirFiber அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். ஜியோ ஏர்ஃபைபர் “நிறுவனத்தின் இணைக்கப்பட்ட வீடுகள் மூலோபாயத்தை துரிதப்படுத்தும்” என்று அவர் நம்புகிறார். ஜியோ நிறுவனம் AirFiber கேபிள்கள் அல்லாத புதிய தொழில்நுட்பத்துடன் வருகிறது. இவை அருகிலுள்ள ஜியோ … Read more

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து

மண்டியா: மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதன் முதலாக நேற்று பங்கேற்று பேசிய ஆதித்யநாத் இதுகுறித்து மேலும் கூறியது: மத அடிப்படையில் வழங்கப்படும் எந்தவொரு இட ஒதுக்கீடும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளதையடுத்து உத்தரபிரதேசத்தில் இரட்டை … Read more

மேற்கு வங்கத்தில், பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

மேற்குவங்க மாநிலம் மால்டாவில் துப்பாக்கி ஏந்திபடி பள்ளிக்குள் புகுந்த நபரால் பதற்றமான சூழல் உருவானது. கடுமையான முயற்சிக்குப் பின்னர் இளைஞர்கள் உதவியுடன் அவனை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். துப்பாக்கியை வைத்து இருந்த போதும் யாரையும் அந்த நபர் மிரட்டவில்லை என்றும், பேப்பர் படித்துக் கொண்டு இருந்ததாகவும் சில மாணவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சில பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குடும்ப பிரச்சனையில் இவ்வாறு செய்ததாக கூறப்படும் நிலையில் அந்த நபர் மனநலம் … Read more

மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் – சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஐஇடி வகை கண்ணிவெடியை சாலையில் புதைத்து, போலீஸாரின் வாகனம் சாலையைக் கடக்கும்போது வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாவட்ட ஆயுத போலீஸ் படை (டிஆர்ஜி) போலீஸார் ஒரு வேனில் … Read more

அமித் ஷாவின் ‘மிரட்டல்’ பேச்சு வெட்கக்கேடானது: காங்கிரஸ் சாடல்

புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நிகழும் என அமித் ஷா பேசி இருப்பது வெட்கக்கேடானது, மிரட்டுவது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள டெர்டால் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, “கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் செல்லும். … Read more

3 நாட்களாக சாப்பிட உணவு இல்லை.. போர் முனையில் சந்தித்த திகில் அனுபவங்கள்.. பகிர்ந்த இந்தியர்கள்..

சூடானில் போர் முனையில் நேரிட்ட திகில் அனுபவங்களை மீட்கப்பட்ட இந்தியர்கள் சிலர் பகிர்ந்துள்ளனர். சூடான் விரைந்துள்ள இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்கள், இதுவரை சுமார் 500 பேரை மீட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றுள்ளன. அவர்களில் சிலர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மோதலில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று துப்பாக்கி முனையில் தங்களை கொள்ளை அடித்ததாகவும், பல மணி நேரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருந்ததாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர். 2-3 … Read more

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு … Read more