”ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை..” – எஸ்.பி.ஐ. வங்கி..!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித அடையாள ஆவணங்களும் தேவையில்லை என, எஸ்.பி.ஐ. வங்கி விளக்கமளித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித படிவமும், அடையாள ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித … Read more

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், மெந்தார் செக்டார் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத தீவிரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை ராணுவத்தினர் நேற்று கண்டனர். அந்த தீவிரவாதி என் கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் அவரிடமிருந்த வெடிகுண்டு மற்றும் சில போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக 15 … Read more

தகாத வார்த்தைகளால் திட்டுவதை வைத்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கூடாது – உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: ‘‘பட்டியல் இனத்தவரை, ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டுவதை வைத்து மட்டும், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கூடாது. பொது இடத்தில் சாதியை இழிவுபடுத்தி திட்டியிருந்தால் மட்டுமே வழக்கு பதிய வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த … Read more

காதலியை கழுத்தை நெறித்துக்கொன்ற ஆண் நண்பர்… வேறு சில ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்…!

ஆந்திராவில், காதலி வேறு சில ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில், அவரை கடற்கரைக்கு வரவழைத்து கழுத்தை நெறித்துக் கொலை செய்த ஆண் நண்பர் போலீசில் சரணடைந்தார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிராவணி என்ற இளம்பெண் திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். சிராவணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சிராவணி வேறு சில ஆண்களுடன் பேசி வந்ததாகவும், இதனை பலமுறை கோபால் கண்டித்தும், அவர் தனது ஆண் நண்பர்களிடம் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தானே திறக்க வேண்டும்?- ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தானே திறக்க வேண்டும். பிரதமர் ஏன் திறக்கிறார்” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இக்கேள்வியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் எழுப்பியுள்ளார். வரும் மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் மே 28 ஆம் தேதியானது இந்துத்துவா மறைந்த தலைவர் விடே சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினத்தை … Read more

புதிய நாடாராளுமன்றத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்: ராகுல் காந்தி

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 32-வது நினைவு தினம்: சோனியா, ராகுல், கார்கே அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கட்ந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று அவரது 32-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச அறிவிப்பு… AIIMS சிகிச்சைக்கு செல்பவர்கள் செம ஹேப்பி!

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு CGHS எனப்படும் மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சாதாரண நோய்கள் முதல் தீவிர பாதிப்புகள் வரை, அறுவை சிகிச்சை முதல் நீண்ட கால சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு கட்டணமில்லா சேவை அளிக்கப்படுகிறது. இதனை குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். மத்திய அரசு அறிவிப்பு இதற்கான கட்டணத்தை முதலில் நாம் மருத்துவமனையில் செலுத்திவிட வேண்டும். அதன்பிறகு மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் … Read more

ஜி20 நாடுகளின் மாநாடு ஸ்ரீநகரில் நாளை ஆரம்பம்… ஸ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை..!

ஜி20 நாடுகளின் மாநாடு, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளை தொடங்கவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதன் 3வது சுற்றுலா பணிக்குழு கூட்டம், நாளை தொடங்கி, வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, ஸ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும், ராணுவத்தினர் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு நடைபெறும் முதல் சர்வதேச மாநாடு என்பதால், எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில், … Read more

ராணுவ தளவாட உள்நாட்டு உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி கடந்த நிதியாண்டில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இது 2021-22 நிதியாண்டைவிட 12 சதவீதம் அதிகம். ராணுவ தளவாட இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை … Read more