ஏப்ரல் 9ம் தேதி முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை

டெல்லி: ஏப்ரல் 9ம் தேதி கோவை மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளியை சந்தித்து கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி என ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருமலையில் இன்று அனுமன் வாகனத்தில் மலையப்பர் உலா

திருமலை: திருமலையில் ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2 நாட்களுக்கு திருவிழா நடைபெறுவது ஐதீகம். அந்த வகையில் இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களான சீதாதேவி, ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை திருமலையில் அனுமன் வாகனத்தில், ஸ்ரீராமர் … Read more

Karnataka Election: சித்தராமையாவிற்கு எதிராக களமிறங்கும் எடியூரப்பா மகன்.?

கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதியில் எடியூரப்பாவின் மகனை களமிறக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடியூரப்பா செய்தியாளர் சந்திப்பு கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை எதிர்த்து தனது மகன் போட்டியிடலாம் என்று இன்று சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது அவரது மகன் யதீந்திரா பிரதிநிவப்படுத்தும் மைசூருவில் உள்ள வருணா தொகுதியில் … Read more

’தஹி’ இந்தித் திணிப்பு அறிவிப்பை வாபஸ் வாங்கியது FSSAI! இந்தித் திணிப்புக்கு கல்தா

CM Stalin vs FSSAI: இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நிறுவனம்  FSSAI. உணவுப் பாக்கெட்டுகள் மீது என்னென்ன விஷயங்களை பொறிக்க வேண்டும் என்பதையும் உணவு பாதுகாப்பு ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. சமீபத்தில் தயிர் பாக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் பெயர் பொறிக்க வேண்டும் என்றும் அது சம்பந்தமாக ஏதாவது பரிந்துரைகளை வழங்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையம் பால்வள நிறுவனங்களான ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கும் பதிலில் Curd … Read more

இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

ம.பி: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க -மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ..!!

வடக்கு திரிபுராவை சேர்ந்தவர் ஜதப் லால் நாத். முதல் முறை எம்எல்ஏவான இவர், பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இந்த ஜதப் லால் நாத் தனது செல்போனில் ஆபாச படம் பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதும், சபாநாயகர் பிஸ்வ பந்து சென் உள்ளிட்டோர் குரலும் தெளிவாக கேட்கின்றன. சக உறுப்பினர்கள் சூழ்ந்திருக்க, சற்று நேரம் மடியில் செல்போனை விரித்து ஆபாச படம் பார்க்கும் ஜதப் லால், அதன் … Read more

கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் ஜாமீன் வழக்கில் ‘சாட்ஜிபிடி’ உதவி நாடிய பஞ்சாப் நீதிமன்றம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியாணாவைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் உள்ளிட்ட சிலர் சேர்ந்து கடுமையாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷிமல்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் ஜஸ்விந்தர் சிங் மீது மேலும் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ஜஸ்விந்தர் சிங் ஜாமீன் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் … Read more

திருப்பதி: கோடைகாலத்தில் குளு குளு ஆஃபர்; ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

திருப்பதிக்கு கோடை காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் வைணவ திருக்கோயில்களில், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் திருப்பதி கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், திருப்பதியில் எப்போது பக்தர்கள் கூட்டம் இருக்கும். அதிலும் கோடைகாலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசின் சாலை போக்குவரத்து கழகம் … Read more

PF Withdrawal Rules:இவர்களுக்கு 20% டிடிஎஸ் கழிக்கப்படும், விதிகள் இவைதான்!!

PF Withdrawal Rules: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பான் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு இபிஎஃப் -லிருந்து பணத்தை திரும்ப எடுக்க, டிடிஎஸ் (TDS) விகிதத்தை தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைப்பதாக அவர் அறிவித்தார். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கும்போது அளிக்கப்படும் இந்த வரிக் குறைப்பு, இபிஎஃப்ஓ ​​(பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பதிவேடுகளில் பான் புதுப்பிக்கப்படாத … Read more

கூட்ட நெரிசலால் கோயில் தரைக்கு கீழிருந்த கிணறுக்குள் விழுந்த பக்தர்கள்.. இந்தோரில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், கோயில் தரையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், ஏராளமான பக்தர்கள் அடியிலிருந்த படிகிணறுக்குள் விழுந்தனர். படிகிணறுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சிவன் கோயிலில், ராம நவமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பாரம் தாங்காமல் கோயில் தரை சரிந்ததால், அங்கு நின்றவர்கள் அடியிலிருந்த கிணறுக்குள் விழுந்தனர். கிணற்றில் சிக்கிய 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Source link