கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
கொச்சியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சர்ச் தலைவர்கள் கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிரதமரிடம் விவாதித்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கொச்சியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சர்ச் தலைவர்கள் கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிரதமரிடம் விவாதித்தனர்.
எல்லையோர கிராமங்கள் நாட்டின் கடைசியல்ல; அவைதான் முதல் கிராமங்கள் என்ற பிரதமர் மோடியின் கூற்றை உத்தரகாண்ட் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது. அதாவது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் சாமோலி கிராமத்தில் பேசிய மோடி, எல்லையோர கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல, அவை நாட்டின் முதல் கிராமங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் உத்தரகாண்ட் மாநில எல்லையோரத்தில் உள்ள மானா என்னும் கிராமத்தின் பெயர், ”முதல் இந்திய கிராமம் மானா” என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அந்த பெயர்ப் … Read more
போபால்: உதய் என்னும் சிவிங்கிப் புலி உயிரிழந்த நிலையில், குனோ தேசிய பூங்காவில் ஒரே மாதத்தில் இரண்டு சிவிங்கிப் புலிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில், மேலும் சில சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டன. … Read more
டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இந்தியப் பயணி ஒருவர் தனது அருகே அமர்ந்திருந்த சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற 2 சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், தற்போது இந்த நிகழ்வு மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மக்களுக்கு விமானப் பயணமே வேண்டாம் என்ற மனநிலைதான் ஏற்படுகிறது. சிலரின் அநாகரீகமாக செயல்களே இதற்கு காரணம். ஓடும் விமானத்தில் புகைப்பிடிப்பது, எமர்ஜென்சி கதவை … Read more
ரிலையன்ஸ் நிறுவனத்தில் நெடுங்காலம் பணியாற்றி அதன் வெற்றிக்கு வழி வகுத்தவர்களில் ஒருவரும், முகேஷ் அம்பானியின் வலதுகரமாக கருதப்படுபவருமான மனோஜ் மோடிக்கு, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார். ஒரு சதுரடி 45 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் மும்பை மாநகரின் நெப்பியன் கடற்கரை சாலையில் அந்த 22 மாடி கட்டடம் அமைந்துள்ளது. விருந்தாவன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 8 ஆயிரம் … Read more
மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி தெரியவந்துள்ளது. மாதத்தின் தொடக்க நாளே விடுமுறைதான். தொழிலாளர் தினம் என்பதால் மே 1ஆம் தேதி நாடு முழுவதும் விடுமுறை. மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா என்பதால், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை. மே 7 – ஞாயிறு, மே … Read more
பாட்னா: ஐஏஎஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முன்னாள் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் மோகன் விடுதலையாகிறார். ராஜ்புட் சமூகத்தைச் சேர்ந்த அவர் இப்போது விடுவிக்கப்படுவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் கணிசமான வாக்குவங்கி கொண்ட அச்சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக சிறை சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதன்மூலம் ஆனந்த் மோகன் விடுதலையாக வழிவகுத்துக் கொடுத்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. யார் … Read more
தலைநகர் டெல்லிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ சேவையை கொண்ட நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இங்கு ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூர பர்பிள் லைன், 30.32 கிலோமீட்டர் தூர கிரீன் லைன் ஆகியவை பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் பர்பிள் லைன் என்பது பெங்களூருவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரு நம்ம மெட்ரோ கிரீன் லைன் என்பது வடக்கு மற்றும் … Read more
கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.
புதுடெல்லி: ரெயின்போ திருமணங்கள் கைகூடும் என நம்பிக்கை தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு தன்பாலின உறவாளர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு ஸ்வீகார் (Sweekar) கடிதம் எழுதியுள்ளது. தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரெயின்போ திருமணங்கள் கைகூடும் … Read more