Kochi Water Metro: வெறும் ரூ.20க்கு ஏசி பயணம்… தண்ணீரில் சீறும் சொகுசு மெட்ரோ… சிறப்பம்சங்கள் இதோ!

கொச்சி வாட்டர் மெட்ரோ (Kochi Water Metro – KWM)… இந்தப் பெயர் இந்தியாவிற்கு புதிது. கேரளாவின் கனவு திட்டம் தற்போது நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது. இம்மாநிலத்தில் நீர்வழிப் போக்குவரத்து என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் சூழலில், வாட்டர் மெட்ரோ அதனை ஒருபடி மேலே கொண்டு சென்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,136.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொச்சி வாட்டர் மெட்ரோ கேரள அரசு, ஜெர்மனியை சேர்ந்த KFW நிறுவனம், பசுமை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வங்கிகள் ஆகியவற்றின் … Read more

‘மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா’ – ஜெர்மனி பத்திரிகை கார்ட்டூனால் கொதிப்படைந்த இந்தியர்கள்

சென்னை: மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ’டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) என்ற வார இதழ் கார்ட்டூன் ஒன்றை வெளியிடப்பட்டது. அது இந்தியர்களை கொதிப்படைய செய்யும் வகையில் உள்ளது. அந்தக் கார்ட்டூனில் சீனா மற்றும் இந்திய தேச கொடிகளை பிரதிபலிக்கும் ரயில்கள் இரண்டு அதன் தடங்களில் செல்கின்றன. அதில் இந்திய … Read more

"அவங்கள ஜெயிக்கனும்னா படி".. ஹிஜாப் போராட்ட மாணவிக்கு தந்தை கொடுத்த அட்வைஸ்.. இன்று ஸ்டேட் ஃபர்ஸ்ட்!

பெங்களூர்: ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி சட்டப்போராட்டம் நடத்திய மாணவிகளில் ஒருவரான தபசும் ஷேக், பியுசி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். படிப்பா, ஹிஜாப்பா என குழப்பம் வந்த போது படிப்பை தேர்ந்தெடுக்குமாறு தனது தந்தை தந்த அறிவுரையே இன்றைக்கு இந்த சாதனைக்கு காரணம் என அந்த மாணவி தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், படிப்பின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் சமூகத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய முடியும் எனவும் தனது தந்தை கூறியதை உணர்ச்சிகரமாக நினைவுகூர்ந்தார் … Read more

செல்போனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பெற்றோர்களே உஷார்

திருச்சூரில் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம். 

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி கேரளாவில் … Read more

வீடியோ பார்க்கும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி..!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) ஆதித்யஸ்ரீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு செல்போனில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் போலீசார் விசாரணை நடத்தி … Read more

கேரளாவின் முதல் ‘வந்தே பாரத்’, கொச்சி நீர்வழி மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அதேபோல், அதேபோல் 10 தீவுகளை இணைக்கும் கொச்சி வாட்டர் மெட்ரோ (நீர்வழி மெட்ரோ) சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், … Read more

அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம்… எழுச்சியா? வீழ்ச்சியா? கர்நாடக மக்கள் எழுதப் போகும் தீர்ப்பு!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பேசும் வாக்காளர்கள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் பல்வேறு தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். இவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய செல்வாக்கு பெற்ற நபரை பாஜக மேலிடம் தேடியது. அந்த வகையில் தான் கர்நாடகாவில் 8 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக மிகத் தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். அண்ணாமலை நியமனம் இதே வேகத்தை கர்நாடகாவிலும் … Read more

Kochi Water Metro: பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ…!

கொச்சி வாட்டர் மெட்ரோ ரயில் கேரள மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடங்கி வைத்தார்

கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் துவக்க விழாவில் பேசிய அவர், மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சிக்கான மூலம் என்றார். இந்தியாவின் ரயில் நெட்வொர்க் வேகமாக மாறுதல் அடைந்து வருவதாகவும், அதிவேக ரயில்களுக்குத் தயாராகி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்னதாக திருவனந்தபுரம் – காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் … Read more