வேணுகோபால சுவாமி கோயிலில் பயங்கர தீ; ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!

நாடு முழுவதும் இன்று ராம நவமி தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமர் அவதரித்த நாளை இவ்வாறு கொண்டாடுகின்றனர். மகா விஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிக மிக முக்கியமானது ராமர் அவதாரம். ராமரின் அருளை பெறுவதற்கு இந்த நாள் மிகவும் உகந்தது எனச் சொல்லப்படுகிறது. வேணுகோபால சுவாமி கோயில் இந்நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகா மந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேணுகோபால சுவாமி கோயிலில் ராம நவமியை ஒட்டி சிறப்பான … Read more

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ… வெளியான வீடியோவால் சர்ச்சை!

Tripura BJP MLA Watching Porn In Assembly: திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஜதாப் லால் நாத், 2018ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இவர் 2018 சட்டப்பேரவை தேர்தலில், சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டார்.  மேலும், இவர் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். இந்தமுறை, திரிபுராவின் வடக்கு மாவட்டத்தின் பாக்பாசா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.  இதனை அடுத்து, திரிபுரா … Read more

தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு

டெல்லி: தயிர் பால் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிட வலியுறுத்திய அறிக்கையை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றது. அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தஹி என இந்தியில் எழுத ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது.ஆங்கிலத்தில் curd என எழுதி அதன் கீழ் தஹி என எழுதுமாறும், வேண்டுமானாலும் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தன. … Read more

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து கொல்கத்தாவில் இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ஆதரவாளர்கள் மத்தியில் … Read more

இன்னும் 24 மணிநேரம்…இந்த திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்

தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: அரசாங்கத்தின் சிறுசேமிப்பு திட்டங்களான பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்றவற்றிலும் நீங்கள் முதலீடு செய்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, அனைத்து வங்கிகளும் தங்களின் எஃப்டிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஆனால் சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் அரசு உயர்த்தும் என்று … Read more

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து!

ஆந்திர: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்களை கோயிலை விட்டு வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

லட்சத்தீவு தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது ஃபைசலின் எம்.பி. பதவி தகுதியிழப்பு ரத்து

புதுடெல்லி: லட்சத்தீவு மக்களவை தொகுதி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி இழப்பை மக்களவை செயலகம் ரத்து செய்து அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர் முகமது ஃபைசல். கொலை முயற்சி வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை கவரட்டி நீதிமன்றம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்து மக்களவை செயலகம் … Read more

ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை

ஆந்திரா: ஆந்திராவில் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ரகளை செய்த நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கர்னூல் மாவட்டம் பத்திகொண்டா காவல்நிலையம் அருகே ஒருவர் வெறி பிடித்தவர் போல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். அந்த வழியாக சென்ற இரண்டு பேருந்துகளை வழிமறித்த அவர் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் கண்ணாடியை உடைத்ததோடு கார் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினார். தொடர்ந்து காவல் நிலையம் சென்று அங்கிருந்த இருக்கைகளையும் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனை கண்டா சிலர் அச்சத்தில் … Read more

"மோடியை குற்றவாளியாக்க சிபிஐ எனக்கு நெருக்கடி கொடுத்தது…": அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டரில் மோடியை குற்றவாளியாக்க அவருக்கு எதிராக என்னைத் திருப்ப சிபிஐ அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், தான் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் தன்னிடம் நடந்த சிபிஐ விசாரணையின் நினைவுகளைப் பகிர்ந்து … Read more

என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு

புதுச்சேரி: என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று அம்மாநில பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் பின் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமைச்சர் நமச்சிவாயம், காவலர்களுக்கு விடுமுறை, பெண் காவலர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறை, ராணுவ வீரர்களுக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேரவையில் பேசியஅமைச்சர் லெட்சுமி நாராயணன், புதுச்சேரி மாநிலத்தில் நிலவக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை … Read more