மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவர் பிரசாந்த் லவானியா நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: மதுரை எய்ம்ஸ் தலைவராக இருந்த நடராஜன் வெங்கட்ராமன் மறைவை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பிரசாந்த் லவானியா உள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த நாகராஜன் வெங்கட்ராமன் ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து தோப்பூரில் … Read more

மேகாலயாவில் 74.32%, நாகாலாந்தில் 81.94% வாக்குகள் பதிவு

ஷில்லாங்/ கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மேகாலயாவில் 76.66 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 84 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. மேகாலயா தேர்தல்: மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்துதொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) … Read more

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார் மீண்டும் கைது..!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, தொழிலதிபர்களிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர். ஏற்கனவே பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் பரப்பன அக்ரஹார சிறையில் ஹரி நாடார் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குஜராத் மற்றும் கேரளாவை சேர்ந்த இரு தொழிலதிபர்களிடம் 100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகக் கூறி, ஒன்றரை கோடி … Read more

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி?

டெல்லி: திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புப்படி மீண்டும் பாஜக ஆட்சி அமையும் இந்தியா டுடே கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் என்.டி.பி.பி – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும், மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் விசாரணை காவல்!!

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் விசாரணை காவல் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சிசோடியா மீது ஊழல் … Read more

கேரளா | இடது காலில் வலி இருப்பதாக சொன்ன நோயாளி; வலது காலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனை ஒன்றில், இடது காலில் வலி இருப்பதாக சொன்ன நோயாளிக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் மருத்துவர். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது புகார் கொடுத்துள்ளார். மருத்துவரின் கவனக்குறைவால் அந்த நோயாளி இப்போது பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நோயாளியின் பெயர் சஜினா சுகுமாரன். 60 வயதான அவரது இடது காலில் வலி இருந்துள்ளது. கதவுக்கு இடையில் கால் சிக்கியதால் இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. வலி இருந்த … Read more

டெல்லி துணை முதல்வருக்கு 5 நாள் சிபிஐ காவல்: நீதிமன்றம் உத்தரவு

சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை கெஜ்ரிவால் அரசு வெளியிடும் முன்பு அதில் சில திருத்தங்களை சிசோடியா செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதோடு, தனிப்பட்ட முறையில் அவர் லாபம் அடைந்ததாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ, அவரை கைது செய்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கூடுதல் விசாரணை நடத்த … Read more

இஸ்ரேலில் மாயமான கேரள விவசாயி இன்று ஊர் திரும்பினார்

திருவனந்தபுரம்: இஸ்ரேல் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன விவசாய முறைகளை தெரிந்து கொள்ள கேரளாவை சேர்ந்த 28 பேர் அடங்கிய விவசாயிகள் குழு கடந்த 12 ம் தேதி அந்நாட்டுக்கு சென்றது. கடந்த 17ம் தேதி இந்த குழுவுடன் சென்ற கண்ணூர் மாவட்டம் இரிட்டி பகுதியைச் சேர்ந்த பிஜு குரியன் என்ற விவசாயி திடீரென மாயமானார். இது தொடர்பாக இஸ்ரேல் நாட்டு போலீசிலும், இந்திய தூதரகத்திலும் புகார் செய்யப்பட்டது. திட்டமிட்டுத் தான் பிஜு குரியன் சென்றிருக்கிறார், அவரை … Read more

திருமணநாளன்று மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்!!

திருமணத்திற்கு முன்பு மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஜினாபாய் ரதோட் என்பவரின் மகள் ஹீதலுக்கும், விஷால் என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நாளில் விழா சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மணப்பெண் ஹீதல் மயங்கி விழுந்தார். இதனையடுத்து பதற்றம் அடைந்த குடும்பத்தார் உடனடியாக மணப்பெண்ணை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். பெண் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இருவீட்டாரும் … Read more

விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டம்: ரூ.16,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

பெலகவி: விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக வழங்கும் விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் … Read more