பாடூர் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வளர்ப்பு யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு: 7 பேர் காயம்

பாலக்காடு:  பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே பாடூர் பகவதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஊர்வலத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் என்ற வளர்ப்பு யானையை விழா கமிட்டியினர் வரவழைத்து இருந்தனர். யானை மீது அம்மன் ஊர்வலம் முடிந்தநிலையில், யானையை தோட்டத்தில் கட்டுவதற்காக, பாகன் கொண்டு சென்றார். அப்போது, யானையின் பின்னால் வந்த மற்றொரு யானை ஒன்று முட்டியதால் தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் என்ற யானை மிரண்டோடியது.   இதனால், மக்கள் சிதறியடித்து ஓடியதில் யானையின் பாகன் நெம்மாராவைச் … Read more

Video: காண்டான காண்டாமிருகங்கள்… சண்டையை போட்டோ எடுத்த பயணிகளை ஓடவிட்ட சம்பவம்!

One Horn Rhinos Attack Viral Video: மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்தபாரா தேசிய பூங்காவில், ஏழு சுற்றுலாப் பயணிகள் சாஃபாரிக்கு சென்ற வாகனம் மீது இரண்டு காண்டாமிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஃபாரி அனுபவத்தை  அனுபவிக்க உற்சாகமாக இருந்த ஏழு சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர். அந்த பூங்காவில், புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை பார்த்தே ஆக வேண்டும் என விருப்பத்துடனும் இருந்தனர். அப்போது, சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை ஒட்டியிருந்த புதர்களின் விலங்குகளின் நடமாட்டத்தை … Read more

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர்; ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பேத்கருக்கு நோபல் பரிசு – பசவராஜ் பொம்மை கோரிக்கை

பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரின் பொருளாதார முனைவர் பட்ட ஆய்வேடான‌ ‘ரூபாயின் சிக்கல்’ வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பெங்களூருவில் அவரது பொருளாதார சிந்தனைகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் கடைசி மனிதனுக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி கிடைக்க வேண்டும் என பாபாசாகேப் அம்பேத்கர் பாடுபட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வடித்த அவர், முதல் சட்ட அமைச்சராகவும் திறம்பட … Read more

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை: தீவிர பாதுகாப்பில் ராணுவம்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை  சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக்கொன்றனர். … Read more

கர்நாடக பேருந்தில் சிறுநீர் கழித்த பொறியாளர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து மங்களூருவுக்கு கடந்த புதன்கிழமை இரவு கர்நாடக அரசு பேருந்து சென்றது. ஹூப்ளியில் நள்ளிரவு 2 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தேநீர் அருந்த சென்றனர். அப்போது 32 வயதான பொறியாளர் ஒருவர் பெண் பயணி அமர்ந்திருந்த இருக்கையின் மீது சிறுநீர் கழித்தார். தேநீர் அருந்திவிட்டு பேருந்தில் ஏறிய அந்த பயணி இருக்கையில் சிறுநீர் கழிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக … Read more

பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு – ஜன்னல்கள் சேதம்..!

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் அந்த ரயிலின் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தென்மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணராஜபுரம்- பெங்களூரு கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசிய நபர்களை தேடி வருகின்றனர். Source … Read more

சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைந்த்துள்ளார். இ-சஞ்சீவினி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்தாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

24 காரட் தங்க தோசை – ஹைதராபாத்தில் விற்பனை

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 24 கேரட் தங்க தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹைதராபாத் தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் தோசாஸ்’ என்ற உணவகத்தில் 24 காரட் தங்க தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தோசையில் 24 கேரட் தங்க நெய் காகி தத்தை வைத்து தருவதால் இதன்விலை ரூ. 1000 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆயினும் இதனை சாப்பிட குடும்பம், குடும்பமாக வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்களில் இந்த உணவகத்தில் … Read more

“முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, சில மாதங்கள் சிறையில் இருந்தாலும் கவலைப்பட போவதில்லை” – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ முன் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ கூறிய நிலையில், டெல்லி நிதிநிலை அறிக்கை தயாரிப்பை காரணம் காட்டி, ஒருவார காலம் சிசோடியா அவகாசம் கோரியிருந்தார். இன்று மீண்டும் விசாரணைக்காக சிசோடியா, சிபிஐ தலைமை அலுவலகம் செல்லவுள்ள நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், கைது செய்யப்பட்டு … Read more