தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் இன்று விசாரணை

டெல்லி: டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து போருக்கு தயாராகும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்

புதுடெல்லி: கடற்படை கமாண்டர்களின் மாநாடு இந்த முறை, புதிதாக சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார். அப்போது மிக்-29கே ரக போர் விமானமும், தேஜஸ்-எம் ரக விமானமும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய ஹெலிகாப்டர்களும் உள்ளன. இந்த கப்பல் வரும் ஆண்டுகளில் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை போருக்கு … Read more

அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார் ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அகமதாபாத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியுடன் பார்வையிடுகிறார். இரு பிரதமர்களும் டாஸ் போடும் நிகழ்வில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தபின், வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை செல்கிறார். முன்னதாக, அகமதாபாத் வந்த அந்தோணி அல்பனீஸ் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். ராஜ்பவனில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். Source link

இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களவை குழுக்களில் துணைஜனாதிபதி ஊழியர்கள்: மரபு மீறல் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களவை குழுக்களில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் அலுவலக ஊழியர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மரபு மீறல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மக்களவை, மாநிலங்களவையில் உள்ள பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களாக எம்பிக்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பை அந்தந்த அவையின் செயலாளர்கள் அவைத் தலைவர்களின் ஒப்புதலுடன் வெளியிடுவார்கள். தற்போது மாநிலங்களவையின் தலைவராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளார். சமீபத்தில் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை குழுக்களில் … Read more

ஹோலி கொண்டாட்டம் இல்லை – முதல்வர் கேஜ்ரிவால் 7 மணி நேரம் தியானம்

புதுடெல்லி: நாட்டின் நலனுக்காக ஒரு நாள் தியானத்தை கடைபிடிப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்த அவர் நேற்று காலை 10 மணிக்கு தனது 7 மணி நேர தியானத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக, ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் முன்னேற்றம் கருதி நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்து தியானத்தில் ஈடுபட்ட டெல்லி முதல்வர் … Read more

ராணுவ பயிற்சியில் விபரீதம் பீகாரில் பீரங்கி குண்டு பாய்ந்து 3 பேர் பலி

கயா: பீகாரில் ராணுவ பயிற்சி நடந்த போது பீரங்கி குண்டு பாய்ந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாகி விட்டனர். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் குலர்வாத் கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது. அப்போது துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை சுட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில்  பீரங்கி குண்டு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் சூரஜ்குமார், அவரது மனைவி கஞ்சன்குமாரி, அவர்களது உறவினர் கோவிந்த் மஞ்ச் ஆகிய 3 … Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 90 விமானங்களை இயக்கிய ஏர் இந்தியா நிறுவன பெண்கள்

புதுடெல்லி: ஏர் இந்தியா குழுமம் மகளிர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் பெண் ஊழியர்களைக் கொண்டு 90 விமானங்களை இயக்கி உள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் இந்த விமானங்களை குறித்த நேரத்தில் இயக்கி ஏர் இந்தியா குழும பெண் பைலட்கள் சாதனை படைத்துள்ளனர். நாடு முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனியார் நிறு வனங்கள் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் … Read more

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து

புதுடெல்லி:  கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை கடற்பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை குழுவினர் 3 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பூரி கடற்கரையில் பெண்களை போற்றும் அழகிய மணற்சிற்பம்..!!

மார்ச் 8-ம் தேதியான நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார். குழந்தையை அரவணைக்கும் தாயாக, மருத்துவராக, காவல் துறை அதிகாரியாக, ராணுவ வீராங்கனையாக என பல்துறையில் பெண்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிலையை அவர் வடிவமைத்துள்ளார். அனைத்து பெண்களையும் வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை குறிப்பிடும் வகையில் இதில் பல்வேறு வண்ணங்களை அவர் சேர்த்துள்ளார். “அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உலகில் … Read more

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ரத உற்சவத்தில் தேர் கவிழ்ந்து விபத்து..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதி உலா தொடங்கியது. பக்தர்கள், பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு வந்தனர். கோண்டா பித்ரகுண்டாவுக்கும் பழைய பித்ரகுண்டாவுக்கும் இடையே சென்றபோது, ​​சாலையின் ஓரத்தில் தேரின் சக்கரம் … Read more