மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்வு

புதுச்சேரியில் ஏற்கெனவே மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த நிவாரணத்தை ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6,500 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் … Read more

பள்ளிகளுக்கான பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு 29 மாநிலங்கள் ஒப்புதல் – தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் ஏற்காததால் மாணவர்கள் பாதிப்பு

புதுடெல்லி: கடந்த வருடம் செப்டம்பர் 5-ல் பிரதமர் மோடியால் பிஎம் ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வரும் இந்த திட்டத்தின் பலனை … Read more

மம்தா பான்ர்ஜி – நவீன் பட் நாயக் சந்திப்பு: மூன்றாவது அணி வேலைகள் தொடங்கிவிட்டதா?

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான அணியை அமைக்குமா, மூன்றாவது அணி உருவாகுமா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது பாஜக. இந்த காலகட்டத்தில் பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது, சில மாநிலங்களில் ஆளும் கட்சிகளோடு கூட்டணியில் இருக்கிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில் கட்சியையும் … Read more

ரூ.400 கோடி போதை பொருள் கடத்திய 3 பேர் கைது

அய்சால்/கரீம்கன்ஜ்: வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மியான்மர் எல்லையை ஒட்டிய சம்பை நகரில் ரூ.390.4 கோடி மதிப்பிலான 39 லட்சம் ஆன்டிஹிஸ்டமின் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல், மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமில் கரீம்கன்ஜ் பகுதியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவை மிசோரமில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

மும்பை: இந்தியாவின் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் 54% அதிகரித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி மையங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஆனால் ஆராய்ச்சி தொடர்பான அனைத்திலும் இந்த வளர்ச்சி இல்லை என்பது கவலை அளிப்பதாக, ஆராய்ச்சி கட்டுரைகளை கண்காணிக்கும் க்யூஎஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலத்தில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் சராசரியாக 22% அதிகரித்துள்ளதாக தரவு … Read more

டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா 4 மாநில பாஜ தலைவர்கள் மாற்றம்: ஜே.பி.நட்டா அதிரடி உத்தரவு

புதுடெல்லி: டெல்லி, பீகார் உள்பட 4 மாநில பாஜ தலைவர்களை மாற்றி பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வௌியிட்ட அறிக்கையில் “தற்போது டெல்லி பாஜ செயல் தலைவராக பணியாற்றி வரும் வீரேந்திர சத்தேவா டெல்லி மாநில பாஜ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில பாஜ தலைவரான சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக தற்போது பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த பாஜ எம்பி … Read more

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அமளி நீடிப்பு நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

புதுடெல்லி:  லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும்கட்சியும், அதானி  விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு காங்கிரஸ் எம்பிகள் கோஷம் எழுப்பினர். அதே சமயம் ஆளும்கட்சி எம்பிக்களும் ராகுல்மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சுமார் 10 நிமிடம் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. … Read more

தமிழ்நாட்டில் பாஜ ஆதரவின்றி அதிமுக செயல்பட முடியாது: சி.டி.ரவி பேட்டி

சிக்கமகளூரு: பாஜ தேசிய பொது செயலாளரும், எம்எல்ஏவுமான சி.டி.ரவி, தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது. தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். அண்ணாமலை சொல்வது சரி. அப்படி சொன்னால் தான் அதிமுகவினர், தாங்களாக எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வருவார்கள்.  1990ம் ஆண்டு எங்கள் கட்சி இருந்ததுபோல், தற்போதும் இருந்து வருகிறது. ஆனால் பாஜவின் ஆதரவின்றி அதிமுக செயல்பட … Read more

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை | முழு விவரம்

சூரத்: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் … Read more

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது

சுக்மா: சத்தீஸ்கர் மாநில கொத்தலேந்திரா பகுதியில் நக்சலைட்டுகள் தங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொத்தலேந்திரா அருகேவுள்ள வனப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 5  நக்சல்களை, பாதுகாப்பு படையினர்  துப்பாக்கி முனையில்   5 நக்சல்களை கைது செய்தனர்.