மகாராஷ்டிராவில் வங்கதேசத்தினர் 18 பேர் கைது

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையின் கன்சோலி பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரின் திருமண நாளை கொண்டாட அந்நாட்டை சேர்ந்த பலர் கடந்த புதன்கிழமை ஒன்று கூடினர். அங்கு போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில் வங்கதேசத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இன்றி ஓராண்டுக்கு மேலாக அப்பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் மற்றும் 1950-ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளின் … Read more

திரிபுராவில் 8ம் தேதி புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் பங்கேற்பு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. முதல்வர் மாணிக் சாஹா நேற்று முன்தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜ தலைமையிலான புதிய அரசு வருகின்ற 8ம் தேதி பதவியேற்கின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பதவியேற்பு விழா விவேகானந்தர் மைதானத்தில் நடைபெறும் என்றார். … Read more

திரிபுராவில் பாஜக அரசு வரும் 8-ஆம் தேதி பதவியேற்பு..!!

சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் வென்றுள்ளது. பிரதமரின் மாநில பயணம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே.சின்ஹா ஆலோசனை நடத்திவருகிறார். மார்ச் 8-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் திரிபுரா வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் … Read more

பழைய பென்ஷன் திட்டத்துக்கு திரும்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: நாட்டில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்ஷன் முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: புதிய பென்ஷன் திட்டம் 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனிடையே டிசம்பர் 22, 2003-க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய … Read more

நாடு முழுவதும் பரவி வரும் ஃபுளு காய்ச்சல் – பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை… மத்திய அரசு எச்சரிக்கை

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கோவிட்டின் ஆரம்பகால அறிகுறிகளைப் போல் தோன்றும் ஃபுளு காய்ச்சல் பரவி வருகிறது என்பதால் மத்திய அரசு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இருமல் சில சமயங்களில் காய்ச்சல் ஆகியவை இதன் முக்கிய அடையாளங்கள். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. மருத்துவரை ஆலோசிக்காமல் … Read more

மம்தா குறித்து சர்ச்சை மே. வங்க காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் பின்னர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான விமர்சனத்துக்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை கவுஸ்தக் பாக்சி கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அவர் மீது நேற்று முன்தினம் பர்டோலா காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார் குழுபாராக்பூரில் உள்ள கவுஸ்தக் வீட்டிற்கு சென்று சோதனை … Read more

இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை வைரஸ் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று முன்தினம் வெளியிட்ட வழிகாட்டு நெறிகளில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள ஐசிஎம்ஆரின் 30 ஆய்வகங்களில் நோயாளிகளின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் என்பது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 15 முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் … Read more

இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அயோத்தியில் மசூதி கட்ட ஒப்புதல் தந்தது ஆணையம்

அயோத்தியா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் மசூதி கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது சர்ச்சைகளை எழுப்பியது. இந்நிலையில், “தன்னிப்பூர் மசூதி கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். அனுமதிக்கப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை ஒருசில துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு ஐஐசிஎப்-பிடம் ஒப்படைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும்” என அயோத்தி ஆணையர் கவுரவ் தயாள்  தற்போது தெரிவித்துள்ளார். “அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து அனைத்து அனுமதிகளும் கிடைத்த பிறகு, விரைவில் மசூதி கட்டுமான … Read more

எதையும் செய்ய வைக்கும் கள்ளக்காதல்… கள்ளக்காதலி பேச்சை கேட்டு மனைவிக்கு விஷ ஊசி போட்ட கணவன்…

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் உணவக மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கு மனைவி கீர்த்தனா, , சாய் சர்வேஸ் என்ற மகனும் உள்ளனர். இவர் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி செந்தாம்பாளையத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.ஸ்ரீதரனுக்கும் அவருடன் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாற, இந்த விவகாரம் கீர்த்தனாவுக்கு தெரிய வர கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே தினமும் … Read more

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழரால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக உள்ளது’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் விதத்தில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. எட்டாவது இணைய கருத்தரங்கு ‘கட்டமைப்பு மற்றும் முதலீடு: பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந்திட்டத்துடன் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது’ என்ற தலைப்பில் நேற்று நடந்தது. … Read more