புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500: ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். ரூ.5,500ஆக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் கூடுதலாக ரூ.1,000 உயர்த்தப்பட்டு ரூ.6,500ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால நிதியுதவி ரூ.2,500ல் இருந்து ரூ.3,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்ற அமைச்சரவை கோப்பிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மோடி குறித்து அவதூறு பேச்சு | ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

சூரத்: கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இனி இவை கூடுதலாக கிடைக்கும்

இமாச்சலப் பிரதேசத்தில் ரேஷன் கார்டு: இமாச்சல பிரதேசத்தில் உள்ள 19.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர் குடும்பங்களுக்கு அரசு ஜாக்பாட் பரிசுகளை தற்போது வழங்கியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ரேஷன் ஒதுக்கீட்டை இப்பொது அரசாங்கம் உயர்த்தியுள்ளது. அந்தவகியில் இந்த மாதம் முதல் ரேஷன் டிப்போக்களில் நுகர்வோருக்கு 15 கிலோ தரமான கோதுமை மாவு மற்றும் 8 கிலோ அரிசி வழங்க இமாச்சலப் பிரதேச அசரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த அளவு அதிகரிப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு, நுகர்வோருக்கு … Read more

காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேசன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏப்.1 முதல் கட்டணம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு கட்டணம் அறிவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியை ஒட்டியுள்ள மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காப்பீடு திட்டத்தில் வராதோர், … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா – எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,134 ஆக இருந்த நிலையில் இன்று 1300 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டது. இந்நிலையில் மேலும் அதிகரித்து இன்றைய தினம் 1300 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று நாடு முழுவதும் 89, 078 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டதில் 1,300 … Read more

வாரணாசியில் நாட்டில் முதல் முறை கேபிள் கார் வழித்தடம்

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் மோடி உள்ளார். புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள அந்த நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் நாட்டிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கான கேபிள் கார் போக்குவரத்து வாரணாசியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.644.49 கோடியில் அமைய உள்ள இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி 24-ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த வழித்தடம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள … Read more

தருமபுரி மாவட்டத்தில் ரூ.170 கோடியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: தருமபுரி மாவட்டத்தில் ரூ.170 கோடியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலம் – திருப்பத்தூர் வாணியம்பாடி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டத்தில் 18 கி.மீ. சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது 15 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை 4 வழி சாலையாக விரிவாக்கப்பட உள்ளது. 

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு – சிசோடியாவின் காவல் ஏப். 5 வரை நீட்டிப்பு

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல்நடந்துள்ளதாகக் கூறி டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்தமாதம் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் அவரை சிபிஐ காவலில் வைத்து மார்ச் 4-ம் தேதி வரை விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் … Read more

அதானி குழும முறைகேட்டைத் தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் : ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதிரடி

வாஷிங்டன் : அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் கவுதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறியது இந்தியாவில் புயலை கிளப்பியது. கரீபிய நாடுகள், மொரிஷியஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் … Read more

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது இடங்களில் கட்டாய முகக்கவசம்

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ”புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 … Read more