அதானியால் எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தன. அதானி குழுமத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உட்பட பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அந்நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விசாரணை அமைப்புகளும் ஏன் அமைதி காக்கின்றன” என்று … Read more

உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி

மும்பை: உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார். தொழிலதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.7,00,257 கோடியாக சரிந்தது.

மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை… அதானி குழுமத்தில் நடப்பது என்ன?

முக்கியமான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், இந்தியாவின் அதானி குழுமம் சமீபகாலமாகச் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதானி குழுமமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் மாறிமாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. மீண்டும் குற்றஞ்சாட்டிய ஹிண்டன்பர்க் இந்த நிலையில், முக்கியமான பிரச்னைகளில் … Read more

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு | பனிப்பொழிவுக்கு இடையே தேசியக் கொடி ஏற்றினார்

ஸ்ரீநகர்: இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது. கடும் பனிப்பொழிவுக்கு இடையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றி முடித்தப் பின்னர், உற்சாகமாக தனது சகோதரி பிரியங்காவுடன் பனிபந்து வீசி ஏறியும் விளையாட்டில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது தனது முத்திரையான வெள்ளைநிற டி … Read more

பட்ஜெட் 2023: ரெடியான ஜாக்பாட் அறிவிப்புகள்… மோடியின் தேர்தல் கணக்கு!

பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்படவுள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 11வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடப்பாண்டு தாக்கல் செய்யப்படுவதே முழுமையான பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பிறகு முழு பட்ஜெட் தாக்கலாகும். அடுத்தடுத்து தேர்தல் இந்நிலையில் நடப்பாண்டில் மட்டும் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, … Read more

காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு

காஷ்மீர்: காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். செப்டம்பர் 7ல் குமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று ஜம்மு மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்ததையொட்டி இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. ஸ்ரீநகரில் பனிமழைக்கிடையே இந்திய ஒற்றுமை … Read more

குல்மார்க்கை மூடிய பனிப்பொழிவு – சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள்

ஜம்மு & காஷ்மீரின் பிரபல குளிர்கால சுற்றுலாத்தலமான குல்மார்க்கில் வெள்ளைப்போர்வை போன்று காணப்படுகிறது பனிப்பொழிவு. அங்கு கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவும் மழையும் மாறிமாறி பெய்துகொண்டிருக்கிறது. பணியாட்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி தரையை மூடியுள்ள பனியை அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள். ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குல்மார்க். பனிச்சறுக்கு மற்றும் பனி விளையாட்டுகளுக்கு பெயர்போன இடமான குல்மார்க்கில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. ஸ்ரீநகரிலிருந்து கிட்டத்தட்ட 49 கி.மீ தூரத்தில் மேற்கு … Read more

ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றினார் ராகுல் காந்தி

ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட அவர் இறுதி கட்டமாக தற்போது ஜம்மு-காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறார். அவர் ஸ்ரீநகரின் பாந்தா சவுக் பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு பாத யாத்திரையை தொடங்கினார். மதியம் 12 மணி அளவில் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றினார். ராகுலின் பாத யாத்திரை ஸ்ரீநகரில் இன்றுடன் … Read more

பெங்களூருவில் ஜி20 அமைப்பின் எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம்!

இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பின் முதலாவது எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம் பெங்களூருவில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் பங்களாதேஷ், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் ஆகிய 9 சிறப்பு அழைப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் இதில் கலந்து கொள்வார்கள். இது தவிர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி … Read more

ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்', காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவு!

காஷ்மீர்: செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்துள்ளார். இந்த பயணத்தில் 12 பொதுக்கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகள் நடத்தியுள்ளார். 375-க்கும் மேற்பட்டோருடன் கலந்துரையாடியுள்ளார்.