மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவும் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

கொடைக்கானல்: போதையில் போதைக்காளானை தேடிச் சென்று காட்டுக்குள் சிக்கிய இளைஞர்கள்!

கொடைக்கானலில் போதை காளானை தேடி வனப்பகுதிக்குள் சென்று வழி தெரியாமல் இரண்டு நாட்கள் உணவின்றி காட்டுக்குள் திரிந்த கேரளா வாலிபர்களை போலீசார் பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 5 பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானல் மேல்மலை பூண்டி அருகே தனியார் தோட்டத்தில் வாடகைக்கு தங்கியுள்ளனர். அன்றிரவு அனைவரும் போதை காளான் சாப்பிட்டுள்ளார். போதை அதிகரிக்கவே மீண்டும் போதை காளனைத் தேடி … Read more

“மணிப்பூரை தீவிரவாதம் இல்லாத மாநிலம் ஆக்கியது பாஜக அரசு” – அமித் ஷா பெருமிதம்

இம்பால்: “ஆளும் பாஜக அரசு மணிப்பூரை தீவிரவாதம், போராட்டங்களில் இருந்து விடுவித்து மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காணொலி காட்சி மூலமாக, ரூ.300 கோடி மதிப்பிலான 12 திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.1,007 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமித் … Read more

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைகழகங்கள்; யுஜிசி வரைவு அறிக்கை.!

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், கல்வியில் இந்தியாவில் முன்னனியில் இருக்கும் தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை எதிர்த்தது. குலக் கல்வி முறையை ஆதரிக்கிறது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தேசிய கல்வி கொள்கையில் எழுந்தன. அதைத் தொடர்ந்து மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இந்தநிலையில் தேசிய கல்வி … Read more

மண்டல் vs கமண்டலம் : தொடங்குகிறது ஜாதிவாரி கணக்கெடுப்பு – யாருக்கு பயன்?

Caste Based Census : ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் துல்லியமான அளவில் இட ஒதுக்கீட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.  சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏழு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கையை தவிர்த்து பிற சமூகங்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை … Read more

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரே ஒரு கட்டடம் மட்டுமே கட்டப்பட்டு அதுவும் தற்போது பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதியில் கூடுதலாக 164 கோடிகள் சேர்க்கப்பட்டு, … Read more

‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ – சென்னை முதலிடம்! கெத்துகாட்டிய தமிழ்நாடு!

இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது என டிஇஐ (DEI) தெரிவித்துள்ளது. பன்முகத்தன்மை, சமபங்கு, உள்ளடக்கம் ஆகியவற்றின் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான அவதார் குழுமம் (DEI) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவதார் நிறுவனம் கடந்த 5ஆம் தேதி  ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ அறிக்கையை வெளியிட்டது. 111 நகரங்களை உள்ளடக்கிய இந்த பட்டியலில் சமூக மற்றும் தொழில்துறை, பெண்களுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும் அடிப்படையில் இந்த பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. … Read more

மீண்டும் காங். வசமான விசுவாசிகள்… குலாம் நபி ஆசாத் அதிர்ச்சி – ராகுல் யாத்திரைக்கு முன் திருப்பம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய உத்வேகம் தரும் வகையில் குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளனர். காஷ்மீரில் ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் உள்ளூர் காங்கிரஸுக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர் பீர்சதா முகமது சையத், முசாபர் பாரே, பல்வான் சிங், மொகிந்தர் பரத்வாஜ், பூஷன் டோக்ரா, … Read more

தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்று அர்த்தத்தில் ஆளுநர் ரவி கூறவில்லை: தமிழிசை பேச்சு

புதுச்சேரி: தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்று அர்த்தத்தில் ஆளுநர் ரவி கூறவில்லை என  தமிழிசை தெரிவித்துள்ளார். பிரிவினைவாத கருத்துகள் அதிகம் வர ஆரம்பித்துள்ள நேரத்தில் ஆளுநர் ரவி அவ்வாறு கூறியுள்ளார் என தமிழிசை கூறினார்.

ரிஷப் உள்ள மருத்துவமனையில் `தி லெஜண்ட்’ நாயகி ஊர்வசி ரதுலா? மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

ரிஷப் பண்ட்டுடன் இணைத்து பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை ஊர்வசி ரதுலா, தற்போது அந்த வதந்திகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக, ரிஷப் இருக்கும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனையின் புகைப்படம் பதிவிட்டுள்ளார். ஊர்வசி ரதுலா, தமிழில் தி லெஜண்ட் படத்தில் நாயகியாக நடித்தவராவார். சில தினங்களுக்கு முன் (டிச 30, 2022) கார் விபத்தில் படுகாயமடைந்திருந்தார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். விபத்தின் தாக்கத்தை தொடர்ந்து, மும்பையின் கோகிலபன் திருபாய் அம்பானி மருத்துவமனையில் … Read more