மதுபோதையில் பயணி மீது சிறுநீர் கழித்த ஏர் இண்டியா பைலட்! அம்பலமான செய்தி வைரல்

நியூடெல்லி: விமானப் பயணம் என்பது, சுகானுபவமாக இருக்கும் என்றால், ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த பைலட்டின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஏர் இந்தியா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் குடிபோதையில் இதைச் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நவம்பர் 26 அன்று நடந்ததாக தெரிகிறது. நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா விமானத்தில் பயணித்த பெண், பிசினஸ் கிளாசில் பயணித்துக் கொண்டிருந்தார். … Read more

சர்வதேச எல்லைப்பகுதியை ஒட்டிய ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் இரவு ஊரடங்கு அமல்

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நோக்கில், சர்வதேச எல்லையை ஒட்டிய, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், 2 மாதங்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச எல்லையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சம்பா மாவட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது கடும் பனிமூட்டம் … Read more

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்

மும்பை: கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுகிறார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்-ன் கார், கடந்த மாதம் 30ம் தேதி டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் ரூர்க்கி எல்லைக்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார்  விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். காயமடைந்த … Read more

போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆசாமி: ஏர் இந்தியா விமானத்தில் நேர்ந்த அவலம்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் பயணி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் இனி விமானத்தில் பயணிக்க தடை விதிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பயணி, “நான் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு … Read more

முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது: ஒன்றிய அரசு அறிவிப்பு..!

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்கள் ஒன்றிய தொகுப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இந்த மருத்துவ இடங்களுக்கு 2 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்படாத இடங்கள் மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கே திருப்பி … Read more

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற இந்த சான்று தேவையில்லை..!

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு இனி ஆதார சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. பெற்றோர், குழந்தைகள், வாழ்க்கைத் துணை என யாராக இருந்தாலும் குடும்பத் தலைவரின் ஒப்புதல் மட்டும் இருந்தால் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.ஆதார் அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடும்பத் தலைவர் என்ற முறையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதாரில் ஏற்கெனவே இருப்பிடச் … Read more

"இந்திய ஒற்றுமை யாத்திரையை ஆர்எஸ்எஸ் கண்டித்ததே இல்லை" – ராமர் கோயில் அறக்கட்டளை செயலர் கருத்து

லக்னோ: “ராகுல் காந்தியின் நடைபயணத்தை பாராட்டியே ஆகவேண்டும். இந்திய ஒற்றுமை யாத்திரையை ஆர்எஸ்எஸ் கண்டித்ததே இல்லை” என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரை செவ்வாய்கிழமை மதியம் உத்தரப் பிரதேசத்தை அடைந்தது. அம்மாநிலத்தில் நடைபெறும் யாத்திரைக்கு ராமர் ஜென்மபூமியின் தலைவர் ஆச்சார்ய சத்தியேந்திர தாஸ் தனது ஆசீர்வாதத்தை வழங்கியிருந்தார். இந்தநிலையில் அவரைத் தொடர்ந்து ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயும் ராகுல் … Read more

இந்தியாவில் கொரோனா நான்காம் அலை வந்துருச்சா… என்ன சொல்கிறது களநிலவரம்?

சுமார் ஒரு வருஷம் இருக்கும். கொரோனா வைரஸை பார்த்து பயப்பட்டு… இப்படி பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. தற்போது மீண்டும் அப்படிப்பட்ட சூழல் வந்துவிட்டதா? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கிட்டதட்ட இந்தியாவில் கொரோனா வைரஸின் நான்காவது அலையா எனப் பேசும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. முன்னதாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் தொற்று பதிவானது. கொரோனா பிளாஷ்பேக் அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அலை உச்சம் தொட்டது. ஊரடங்கு உள்ளிட்ட … Read more

கார்விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்

மும்பை: கார்விபத்தில் படுகாயமடைந்த இந்தியகிரிக்கெட் வீரர் ரிஷப்பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுகிறார்.

காஷ்மீர் சர்வதேச எல்லையில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை..!

சம்பா: ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 3 வீடுகளை குறிவைத்து அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ப்ரீதம் லால் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரில் சமீபகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் … Read more