தலைமைச்செயலாளர்கள் கூட்டத்தில் செஸ் வரி பகிர்வு குறித்து கேள்வி எழுப்ப மாநிலங்கள் திட்டம்

புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை தொடர்பாக, நாளை துவங்க உள்ள தலைமை செயலாளர்கள் கூட்டத்தில், செஸ் வரி, ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இழப்பீடுகள் போதுமானதாக இல்லை எனவும், தாமதமாக இழப்பீடு வழங்கப்படுவதாகவும் பல மாநிலங்கள் குற்றம் சாட்டின. ஜிஎஸ்டி இழப்பீடு … Read more

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 21 ஆக உயர்வு; பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்றதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனையை அதிகரித்துள்ளோம் என்று சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இச்சூழலில் வெளிநாடுகளில் தொற்று அதிகரிப்பால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறியதாவது: … Read more

குடும்பத் தலைவரின் ஒப்புதலோடு ஆதாரில் முகவரி மாற்றம்: புதிய வசதி அறிமுகம்

புதுடெல்லி: குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு, குடியிருப்பவர்கள் இணைய வழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்போரின் உறவினருக்கு (குழந்தைகள், கணவன்/ மனைவி, பெற்றோர்) இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், ரேஷன் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற … Read more

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்து 61,294ல் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்ந்து 61,294ல் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 18,232 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

தேசிய தலைமைச்செயலாளர்கள் கூட்டத்தில் செஸ் வரி பகிர்வு குறித்து கேள்வி எழுப்ப மாநிலங்கள் திட்டம்: ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க முடிவு

புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை தொடர்பாக, நாளை மறுநாள் துவங்க உள்ள தேசிய தலைமை செயலாளர்கள் கூட்டத்தில், செஸ் வரி, ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இழப்பீடுகள் போதுமானதாக இல்லை எனவும், தாமதமாக இழப்பீடு வழங்கப்படுவதாகவும் பல மாநிலங்கள் குற்றம் சாட்டின. … Read more

மேற்குவங்கம்: வந்தே பாரத் விரைவு ரயில் மீது கற்கள் வீச்சு! ஜன்னல் கண்ணாடிகள் சேதம்!

மேற்கு வங்காளத்தில் டிசம்பர் 30ஆம் தேதி அர்ப்பணிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் தனது முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை, டிசம்பர் 30 அன்று வரவேற்றது. ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி (NJP) இடையேயான அதிவேக ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் ஏழாவது வந்தே பாரத் விரைவு ரயிலாகும். ஹவுரா மற்றும் … Read more

IRCTC-க்கு செய்த ட்விட்டால் வந்த வினை! ரூ.64,000 இழந்த பெண்!

சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து  ரூ.64,000 பறித்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணே அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து OTP-ஐ நிரப்ப, அவளுடைய பணம் கணக்கில் இருந்து காணாமல் போனது. IRCTC க்கு ட்வீட் செய்த பெண் மோசடியினால் பாதிக்கப்பட்ட அந்த  பெண் மும்பையில் வசிப்பவர். அவரது பெயர் எம்.என்.மீனா. சமீபத்தில் அவர் IRCTC இணையதளம் … Read more

9 மாநில பேரவை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலுக்காக பிப்ரவரியில் காங். தேசிய செயற்குழு கூட்டம்: சட்டீஸ்கரில் நடக்கிறது

புதுடெல்லி: சட்டீஸ்கரில் வரும் பிப்ரவரியில் நடக்கும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தாண்டு நடக்கும் 9 மாநில பேரவை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று மூத்த தலைவர் கூறினார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பின் முழு நேர தலைவர் இல்லாததால் சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த காங்கிரசின் உட்கட்சி தேர்தல் மூலம் மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே … Read more

ஒருபோதும் அம்பானி, அதானியால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி பேச்சு

டெல்லி : அம்பானி அதானியால் ராகுல் காந்தியை வாங்க முடியவில்லை. இனி  வாங்கவும் முடியாது என பிரியங்கா காந்தி  பேசியுள்ளார். புத்தாண்டு விடுமுறையை முடிந்து மீண்டும் தனது ஒற்றுமை யாத்திரையை டெல்லியில் உள்ள மார்கத் அனுமன் கோயில் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடங்கினார். அவருக்கு தொண்டர்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இன்று அவர் டெல்லியை தொடர்ந்து உத்திர பிரதேசத்திற்குள் நுழைந்தார். அவரை காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொது செயலாளர் பிரியங்கா காந்தி … Read more

நாய் கடித்த வழக்கு..! தள்ளுபடி செய்தது நீதிமன்றம்…

டெல்லியில் சிறுமியை நாய் கடித்ததில், உரிமையாளர் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. டெல்லியின் ஜகத்புரி பகுதியில் தனது வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த செல்லப்பிராணி நாய் பக்கத்து வீட்டு சிறுமியை கடித்துள்ளது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் தாயார் செல்லப்பிராணி நாயின் உரிமையாளர் மீது காவலர் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தன் … Read more