ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மருத்துவனமனையில் தி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். ஜார்கண்ட் தன்பாத்தில் உள்ள மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த  தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5 பேர் – மருத்துவர், அவரது மனைவி, அவர்களது மருமகன், மற்றொரு உறவினர் மற்றும் அவர்களது வீட்டு வேலை செய்பவர்கள் … Read more

தெரு நாய் கடித்து குழந்தைகள் உட்பட 80 பேர் பாதிப்பு

போஜ்பூர்: பிஹாரின் அராஹ் நகரில் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் தெருநாய் கடித்த காயங்களுடன் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர்கள் அனைவரையும் ஒரே நாய் கடித்து குதறியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த நாயை பிடிக்க குழு ஒன்றை அனுப்பினர். அதற்குள் அப்பகுதி மக்களே நாயை அடித்துக் கொன்று விட்டனர். மருத்துவமனை மேலாளர் கவுஷல் துபே கூறும் போது, “காயங்களுடன் மருத்துவ மனைக்கு … Read more

தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் அடுத்தமாதம் 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருகை

புதுடெல்லி: அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள்  இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் அழிந்த விலங்குகளாக கருதப்படும் சிவிங்கி புலிகளை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி கடந்த  ஆண்டு நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. இந்நிலையில் மேலும் 12  சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட இருக்கிறது. கடந்த முறை நமீபியாவில் … Read more

ம.பியில் நிலவும் கடும் குளிர் – ஒத்திகையின்போது மாணவிக்கு ஏற்பட்ட மாரடைப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்குச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள உஷா நகர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் விருந்தா திரிபாதி. இவர் குடியரசு தின கொண்டாட்ட ஒத்திகைக்காக புதன்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் ஒத்திகையில் இருந்த விருந்தா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக விருந்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் … Read more

கர்நாடக அரசை விமர்சித்த போது மடாதிபதியிடம் மைக்கை பிடுங்கிய முதல்வர்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மகாதேவபுராவில் நேற்று முன்தினம் மாலை மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமியின் ஷங்கராந்தி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மடாதிபதி ஈஸ்வரானந்தபுர சுவாமி பேசுகையில், ”நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வு காண்பதில்லை. மகாதேவபுரா தொகுதியில் ஆண்டுதோறும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகள், பாதாள சாக்கடைகள், கால்வாய்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. வெள்ளம் வந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு … Read more

ராஜஸ்தானில் இன்று பகவான் தேவநாராயணன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் பகவான் தேவநாராயணன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். பில்வாரா மாவட்டம் மாலாசேரி டங்கரி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி குர்ஜார் இனத்தவர் வணங்கும் தேவ நாராயணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார். குர்ஜார் இனத்தவரின் வாக்குவங்கியை பெறுவதற்காக பகவான் தேவநாராயணன் அவதரித்த கிராமத்துக்கு மோடி செல்வதாக விமர்சிக்கப்பட்ட போதும், பிரதமரின் வருகையில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று பாஜகவினர் கூறுகின்றனர். Source … Read more

ஜம்மு காஷ்மீர் வைஷ்னவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புகாக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

ஜம்மு காஷ்மீர்: வைஷ்னவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புகாக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் யாத்ரா அட்டை அறிமுகம் செய்யப்படும். பாதுகாப்பு வசதிக்காக யாத்ரா அட்டை ரேடியோ அதிர்வலை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லையில் கட்டுமான பணிகள் அதிகரிப்பதால் சீனா – இந்தியா மோதல் தீவிரமடையும் –  லடாக் காவல் துறையின் ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் 3,500 கிமீ தூரத்துக்கு எல்லையை பகிர்கின்றன. இந்த எல்லை தொடர்பாக 1962-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை காராணமாக இரு நாடுகளிடையே மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சீன தரப்பில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்ததாக தகவல் வெளியானது. 20 … Read more

Vitasta: காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்குமான கலாச்சார தொடர்பு! சென்னையில் 3 நாட்கள் விழா

சென்னை: மத்திய கலாச்சார துறை சார்பாக, காஷ்மீரில் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு உள்ள கலைகளை பெருமைகளை சொல்லும் வகையில் VITASTA என்ற தலைப்பில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்‌ஷேத்ராவில் மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தொடங்கி வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீரில் பாரம்பரிய உணவுகள்,  உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு கலைப் பொருட்கள் ஆகியவை … Read more

குஜராத் மோர்பி பால விபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்: 10வது குற்றவாளியின் பெயர் சேர்ப்பு

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்து தொடர்பாக 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் 10வது குற்றவாளியாக ஒரேவா நிறுவனத்தின் ஜெய்சுக் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி திறக்கப்பட்டது. இதன் புனரமைப்பு பணிகளை ஒரேவா என்ற நிறுவனம் மேற்கொண்டது. இந்நிலையில், அக்டோபர் … Read more