ஜனார்த்தன ரெட்டியின் சொத்துகள் பறிமுதல் – சிபிஐக்கு கர்நாடக அரசு அனுமதி

பெங்களூரு: கர்நாடக‌ முன்னாள் அமைச்சரும் சுரங்க தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி மீதான சட்ட விரோத சுரங்க வழக்கை சிபிஐ கடந்த8 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து வருகிறது. ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவி மற்றும்நிறுவனங்கள் வருமானத்துக்கு அதிகமாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ய அனுமதி கோரி சிபிஐ கடந்த ஆண்டு கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது. பதில் இல்லாததால் சிபிஐ கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கை விசாரித்த … Read more

இதுவரை இல்லாத அளவு வட இந்தியாவில் – 4 டிகிரி குளிர் அலை வீசும்

புதுடெல்லி: வட இந்தியாவில் வெப்பநிலை இந்த வாரம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தாலும், ஜனவரி 2023 இல் இன்னும் குளிர் அதிகரிக்ககூடும் என்று வானிலை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார், இந்த வார இறுதியில் இருந்து வட இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவு குளிர் நிலவும் என்று எச்சரிக்கைகளும், முன்னறிவிப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. ஜனவரி 14 மற்றும் 19 க்கு இடையில் கடுமையான குளிர் ஏற்படும் என்றும், அதில், குறிப்பாக ஜனவரி 16 முதல் 18 வரை … Read more

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 136 அடியாக சரிவு..!!

கேரளா: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியில் இருந்து 136 அடியாக சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் டிச.27 அன்று 142 அடியை எட்டியது. முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 238 கன அடி தமிழ்நாட்டுக்கு நீர்திறப்பு 1,837 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

வரும் 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எங்கள் கோரிக்கைகளுக்கு இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து இது வரையிலும் எந்த பதிலும் வராததால், நாங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கவும், அதாவது ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்திற்கு … Read more

பிரதமர் மோடியை சுவாமி விவேகானந்தருடன் ஒப்பிட்ட மேற்குவங்க பாஜக எம்.பி: திரிணமூல் அதிருப்தி

பிரதமர் நரேந்திர மோடியை சுவாமி விவேகானந்தரின் மறு அவதாரம் என்று விமர்சித்த மேற்குவங்க மாநில பாஜக எம்.பி., சவுமித்ரா கானின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட எம்.பி. சவுமித்ரா கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சுவாமி விவேகானந்தர் இறைவனுக்கு சமம். சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் நரேந்திர மோடி உருவில் மீண்டும் அவதரித்துள்ளார். இன்று நம் பிரதமர் தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் வாழும் விதம் அவர் தான் … Read more

டெல்லியில் அதிக குளிர், காற்று மாசுபாடு காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் அங்கு மாரடைப்பு நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள்,மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தவிர்க்க நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், காலையில் நடைபயிற்சி செய்வதை தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் குளிர் காலங்களில் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை … Read more

கங்கை நதியில் உலகின் மிகப் பெரிய கங்கா விலாஸ் கப்பல் சேவை பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தார்

டெல்லி: கங்கை நதியில் உலகின் மிகப் பெரிய கங்கா விலாஸ் கப்பல் சேவை பிரதமர் மோடி காணொளியில் தொடங்கி வைத்தார். 50 நாட்களில் 3,200கி.மீ தூரம் நதியில் பயணம் செய்யும் வகையில் கங்கா விலாஸ் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரணாசியிலிருந்து திப்ரூகர் வரை நதிநீர் வழித்தடத்தில் கங்கா விலாஸ் கப்பல் சேவை இயக்கப்பட உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்..!

உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. பீகாரிலிருந்து மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், … Read more

பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அமித்ஷா பயணம்!….

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு செய்ய உள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்து மதத்தை சேர்ந்த 3 குடும்பங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்திலலும் டோங்கிரி கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா … Read more

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் ரூ.11 கோடி சிக்கியது

கொல்கத்தா: மேற்கு வங்கம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஜாகீர் ஹுசைனின் முர்ஷிதாபாத் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். புதன்கிழமை மாலை முதல் வியாழன் காலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.11 கோடி பணத்தை வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது கணக்கில் காட்டப்பட்ட பணமா என எம்எல்ஏ ஜாகீர் ஹுசைனிடம் விசாரணை நடப்பதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more