ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்..!!

குடியரசு தின விற்பனையில் ஸ்பைஸ்ஜெட் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதில் உங்கள் விமான டிக்கெட்டை வெறும் ரூ.1126க்கு நீங்கள் பெறலாம். ஆனால் இந்த டிக்கெட்டை எங்கு, எப்படி முன்பதிவு செய்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகின்றது, அதன்படி 1126 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஸ்பைஸ்ஜெட் அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பதிவிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை … Read more

பிராந்திய மொழிகளில் நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதி அறிவிப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நாளை தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியாகவுள்ளது. அதாவது, 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு … Read more

குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி வந்தார் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்ததினராகப் பங்கேற்க டெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு உறவுகள் குறித்தும், வேளாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் தொடர்பாகவும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் எகிப்து அதிபர் இன்று சந்தித்துப் பேசுகிறார். முன்னதாக மூன்றுநாள் பயணமாக டெல்லி வந்த எகிப்து அதிபருக்கு விமான நிலையத்தில் உற்சாக … Read more

அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார்..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களில் இருந்து பணம் கையாடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலை வழக்கு – மத்திய அமைச்சர் மகனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்!

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு 8 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அமைதியான வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்கள்மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடைய கார் புகுந்ததில் … Read more

லக்கிம்பூர் கேரி வழக்கு | ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைகால ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உத்தர பிரதேசத்தில் தங்க தடைவித்துள்ளது. தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆஷிஸ் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த … Read more

74ஆவது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை!

நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றவுள்ளார். இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் … Read more

ஏர் இந்தியாவின் விமானத்தில் மது அருந்துவது தொடர்பான விதிகளில் திருத்தம்

விமானத்துக்குள் மது அருந்துவது தொடர்பான கொள்கையில் சில திருத்தங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் அண்மையில் பயணி ஒருவர் சகபயணி மீது சிறுநீர் கழித்தது போன்ற விரும்பத்தகாத சில சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் விமானத்தில் மதுவழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. விமானப் பணிக்குழுவினரால் மட்டும் மது வழங்கப்பட வேண்டும் என்றும் தாமாக மது அருந்தி வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் … Read more

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை ரூ.45ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை ரூ.45ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை வளாகம் அருகே பாலை சாலையில் ஊற்றி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்திய பிரதமர், ஜனாதிபதியுடன் எகிப்திய அதிபர் சந்திப்பு! கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்!

இன்று பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கிறார் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்- சிசி. இதில் ஆறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுகின்றன குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அவர்கள், இன்று பிரதமர் மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்திக்கிறார். இந்தியா – எகிப்து இடையே விவசாயம், இணையப் பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை … Read more