5 ஜி நெட்வொர்க்கால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்து டிஜிபிக்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை தாக்கல்

போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதித் திரட்டுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படக் கூடும் என்று டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இணையவழிக் குற்றங்கள் மற்றும் சைபர் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் ஒரு முழு சிஸ்டத்தையே முடக்கக் கூடிய ஆபத்து இருப்பதையும் சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் எழுதிய அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. டிரோன்களைக் கட்டுப்படுத்துதல், ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்தல் போன்ற … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் வரும் 31ம் தேதி கூடுகிறது. மரபுப்படி அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். குடியரசு தலைவர் உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1ம் தேதி 2023 -2024 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

`ஒரு நாள்ல 8 நிமிஷம்தான் வேலை; வருஷம் ரூ.40 லட்சம் சம்பளம்!’-ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு கடிதம்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா தன்னுடைய 30 ஆண்டு பணிக்காலத்தில் 55 முறை ‘டிரான்ஸ்பர்’ செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது பரபரப்பு பேச்சொன்றை பேசியுள்ளார். ‘நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகின்றன’ என்றொரு சொலவடை உண்டு. அதே போன்றுதான், நேர்மையான அதிகாரிகள் அரசுகளால் பந்தாடப்படுவது அனைத்து மாநிலங்களிலும் அரங்கேறும் காட்சியாகி விட்டது. அதற்கொரு உதாரணம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா. இவர் தன்னுடைய 30 வருட பணிக்காலத்தில் … Read more

பாஜகவுக்கு ஆதரவான பதிவு.. முன்னாள் அமைச்சர் மகன் காங்கிரசில் இருந்து விலகல்..!

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவண படத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் காங்கிரசில் இருந்து இன்று விலகி உள்ளார். பிபிசி நிறுவனம் பிரதமர் மோடியை பற்றிய ஆவணப் படம் ஒன்றை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. அதில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காலனி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், … Read more

தெலங்கானா புதிய தலைமை செயலக கட்டிடம் பிப்ரவரி 17-ம் தேதி திறப்பு – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு?

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. இக்கட்டிட திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளனர். ஆதலால், இவ்விழாவினில், தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலினும் கலந்துக்கொள் வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, ரூ.650 கோடி செலவில் தெலங்கானாவின் புதிய தலைமை … Read more

லக்கிம்பூர் கேரி கொலை வழக்கு: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்!

லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நிபந்தனைகளுடன் 8 வாரம் ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் … Read more

இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தல் எல் சிசி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு

டெல்லி: இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தல் எல் சிசி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை எகிப்து அதிபர் அப்தல் எல் சிசி சந்தித்தார்.

IND Vs NZ ஆட்டத்தின்போது திடீர் மாரடைப்பால் சுருண்ட காவலர்! CPR செய்து அசத்திய அதிகாரிகள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டதில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று (ஜனவரி 24) இந்தூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது பணியில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் பிரசாந்த் … Read more

எகிப்து அதிபரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்

புதுடெல்லி: எகிப்து அதிபர் அல் சிசிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி நேற்று (செவ்வாய்கிழமை) மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் … Read more

ஏப்ரலில் பாஜகவின் அதிரடி ஆட்டம்… தெற்கை வளைக்க பிரம்மாண்ட வியூகம்!

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டே இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவிற்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் தென்னிந்திய மாநிலங்களும் அடங்கும். தமிழ்நாடு பிளான்குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இதேபோல் வரும் மக்களவை தேர்தலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் … Read more