ஜி-20 முதல் கூட்டம் கொல்கத்தாவில் தொடங்கியது: ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற தலைப்பில் வரவேற்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஜி-20 நாடுகளின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.  ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற பெயரில் நகரப்பகுதியில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் முதல் கூட்டம் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர். கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள விஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த … Read more

ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பாடம் நடத்தணும்..மாணவர்களுக்காக ஒலித்த தோனியின் நெகிழ்ச்சி உரை

”கற்பித்தல் என்பது ஒரு கலை” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, தான் எப்போதும் ஆசிரியர்களின் தீவிர ரசிகனாக இருந்ததாகக் கூறினார், தொழில்நுட்பக் கல்வியாளர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்வியாளர் கே.கே.அப்துல் கஃபார் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இவர் தன்னுடைய சுயசரிதை நூலை, ’நான் ஒரு சாட்சி’ ’Njaan Sakshi’ … Read more

“இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் வேலை செய்கிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

குருஷேத்ரம்: இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் வேலை செய்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ஹரியாணாவின் குருஷேத்திரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ”ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் ‘ஹர ஹர மகாதேவ்’ என கோஷமிட்டது கிடையாது. ஏனெனில், கடவுள் சிவன் ஒரு தபஸ்வி. இவர்கள் இந்தியாவின் தபஸ்வியை தாக்குபவர்கள். ‘ஜெய் சியா ராம்’ என்ற வரியில் இருந்து சீதாவை நீக்கியவர்கள் இவர்கள். இந்திய … Read more

ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது; திரிணாமுல் எம்பி உறுதி.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய … Read more

திருவனந்தபுரத்தில் பறவைக் காய்ச்சல்: 3 ஆயிரம் பறவைகளை கொல்லும் பணி துவங்கியது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் அழூர் அருகே உள்ள பெருங்குழி பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி மற்றும் வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சாகத் தொடங்கின. இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபால் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணையில் … Read more

நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும்

நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்திய தின விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த உலகமே ஒரே நாடுதான் என்றார். அனைத்து மக்களும் நம் சகோதரர்கள்தான் என்று கூறிய அவர், இது நம் முன்னோர்களால் கலாச்சார ரீதியில் வடிவமைக்கப்பட்டது என்று தெரிவித்தார். இந்த … Read more

கேரள மாநிலத்தில் ஓலைச் சுவடி அருங்காட்சியகம்

திருவனந்தபுரம்: கேரள அரசின் ஆவணத் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு உள்ளது. இது உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் ஆகும். நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் பனை ஓலைச் சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. Source … Read more

டெல்லி கொடூர கார் விபத்து; 6 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.!

வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அஞ்சலி சிங், 20, என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. இருசக்கர வாகனத்தை காரில் இழுத்துக் கொண்டே சென்ற நபர்கள், அஞ்சலி சிங் இருப்பதை மறந்து வேகமாக சென்றனர். காருக்கு அடியில் சிக்கிய … Read more

கேரளாவில் சென்னை தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை; நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நடக்காவு பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஆனிக் (19). சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில் முதலாம் பருவத் தேர்வு இந்த வாரம் தொடங்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகம்மது ஆனிக் தேர்வுக் கட்டணத்தை கட்டினார். ஆனால் 80 சதவீத ஆஜர் இல்லை என்று கூறி அவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. … Read more

”கண்ணியத்துடன் செயல்படுங்கள்”- தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்!

வன்முறைக் காட்சிகளை ஒளிபரப்புவது குறித்து அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சமீபகாலமாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசம், இரட்டை அரத்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் ஆகியன அதிகளவில் அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. இதுபோன்ற காட்சிகள் முகம் சுளிக்க வைப்பதுடன், குழந்தைகளை தவறான பாதைக்கும் இழுத்துச் செல்வதாகவும் உள்ளது எனவும் சில வன்முறைக் காட்சிகளால் குழந்தைகள் அச்சம் கொள்ளவும் செய்கின்றனர் எனவும் அந்த விமர்சனங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் விபத்துகள், இறப்புகள், … Read more