நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். சீனாவில் பி.எப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் உலக நாடுகளுக்கும் பரவி விட்டது. தினமும் லட்சக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பி.எப்.7 ரக கொரோனா இந்தியாவிலும் ஏற்கனவே தலைகாட்டி விட்டது. குஜராத், மேற்குவங்கம், ஒடிசாவில் இந்த தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் … Read more

இப்படியும் நடக்குமா..? கணவனை கொடுமைப்படுத்திய ‘குடிமகள்’; விரக்தி அடைந்த கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல்!

சத்திஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு, 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கும் அடிமையாகி இருப்பது தெரிய வந்தது. இந்த விஷயம் பெண்ணின் மாமியார்களுக்கு தெரிய வந்ததும், அவர்களும் பலவாறு அவலை திருத்த முயன்றனர். ஆனால் அவர் … Read more

பேச மறுத்ததால் ஆத்திரம் விமானத்தில் வந்து காதலியை 51 முறை குத்திக்கொன்ற கண்டக்டர்

கார்பா: பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து ஸ்க்ரூ டிரைவரால் 51 முறை பஸ் டிரைவர் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷ் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். நீல்குஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர் – கார்பா இடையே … Read more

மூக்குவழியாக செலுத்தப்படும் கரோனா மருந்தின் சந்தை விலை ரூ.800 ஆக இருக்கும் – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

ஹைதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து, தனியார் சந்தையில் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மூக்குவழியாக செலுத்திக் கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’ கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) இம்மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியது. மூக்குவழியாக பயன்படுத்தக்கூடிய, உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து இன்கோவாக் ஆகும். அட்டவணைப்படி, இந்த மருந்தை … Read more

கர்நாடகாவில் மீண்டும் தீவிரவாதிகள் நாசவேலை? பார்சலில் வந்த மிக்சி வெடித்து சிதறியது: கூரியர் நிறுவன உரிமையாளர் படுகாயம்

ஹாசன்: மங்களூருவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பு அடங்குதற்குள் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சலில் வந்த மிக்சி வெடித்து சிதறியது. இதில் கூரியர் அலுவலக உரிமையாளர் படுகாயம் அடைந்தார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவன் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவன் என்பது தெரியவந்தது. இந்நிலையில், ஹாசன் மாவட்டம் … Read more

ஒடிசா ஓட்டலில் அடுத்தடுத்து மர்மம் புடினை விமர்சித்த ரஷ்ய எம்பி மரணம்: 3வது மாடியிலிருந்து தவறி விழுந்தார்

ராயகாடா: ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். பெரிய கோடீஸ்வரர். இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 4 பேருடன் ஒடிசாவுக்கு கடந்த 21ம் தேதி சுற்றுலா வந்தார். ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தார்கள். கடந்த 22ம் தேதி பாவெலுடன் வந்த விளாதிமிர் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி ஓட்டல் 3வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து பாவெலும் மர்மமாக மரணம் அடைந்தார். … Read more

அசாமில் ஆலங்கட்டி மழை 4500 வீடுகள் சேதம்

தின்சுகியா: அசாம் மாநிலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. பெரிய பெரிய பனிக்கட்டியாக மழை பெய்தது. இதனால் திப்ரூகர் மாவட்டத்தில் 4500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் அதிகாலை வரை மோரன், திங்காங், லாஹோவல், லெகாய், நகர்கடியா உள்ளிட்ட பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தன. … Read more

நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ்?

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில்  டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் … Read more

விமானம், ஹெலிகாப்டர் பீகார் அரசு வாங்குகிறது

பாட்னா: விஐபிக்கள், விவிஐபிக்கள் பயணம் செய்ய புதிய விமானம், ஹெலிகாப்டரை வாங்க பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் பயணம் செய்ய புதிய ஜெட் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய ஜெட் விமானம், ஹெலிகாப்டர் வாங்குவதற்கான வழிமுறைகளை வகுக்கு தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராமருடன் ராகுலை ஒப்பிட்ட காங். தலைவர்: பாஜ கண்டனம்

புதுடெல்லி: ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் பேசியதற்கு பாஜ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை நடத்தி வருகிறார்.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சல்மான் குர்ஷித் ராகுலை ராமருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ‘’ராமரின் பாதுகைகளை வைத்து பரதன் ஆட்சி நடத்தினார். அவர் வருவதற்கு முன்சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அதே போல் உ.பிக்கு பாதுகை வந்துவிட்டது. ராமர் … Read more