‘படத்தை ஓடவிடுங்க சார்..!’- அஸ்ஸாம் முதல்வருக்கு போன் போட்ட ஷாருக்கான்.!

அஸ்ஸாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் நாடுமுழுவதும் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தநிலையில் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் … Read more

காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை பயணம்’..!

ஜம்மு காஷ்மீரில் நேற்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புகளால், இன்று உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை அங்கு மேற்கொண்டார். ஹிராநகரிலிருந்து டக்கர் ஹவேலிவரை சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபயணம் செல்வதால், அவரையும், அவருடன் செல்லும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை பயணத்தை வரும் 30ஆம் தேதி காஷ்மீரில் ராகுல் காந்தி நிறைவுசெய்கிறார். Source link

திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதிகளவு பக்தர்கள் வருகையால் தினமும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருமலையில் விமானங்கள் பறக்கவும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த தடை மற்றும் பலத்த பாதுகாப்பை … Read more

''உச்ச நீதிமன்றத்தைவிட உயர்வானது பிபிசி என்ற நினைப்பு சிலருக்கு இருக்கிறது'': கிரண் ரிஜிஜூ விமர்சனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தைவிட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் கண்ணியமானவை அல்ல என்று மத்திய வெளியறவு அமைச்சகம் விமர்சித்தது. இந்த ஆவணப்படங்களை ஆதரித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் … Read more

உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே முற்றும் போர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு..!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 9.078 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 505.519 பில்லியன் டாலர்களாகவும், தங்கம் கையிருப்பு 1.106 டாலர்கள் அதிகரித்து 42.890 பில்லியன் டாலர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஜம்முவில் நள்ளிரவு வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயம்: 24 மணி நேரத்தில் 3 சம்பவம் நடந்ததால் பதற்றம்

ஜம்மு: ஜம்முவில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையின் போது லாரியின் டேங்க் வெடித்ததில் போலீஸ்காரர் காயமடைந்தார். 24 மணி நேர இடைவெளியில் 3 வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நர்வால் பகுதியில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் நேற்று காலை 15 நிமிஷங்கள் இடைவெளியில் இரட்டைக் குண்டுவெடிப்பு நடந்தது. … Read more

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது

புதுடெல்லி: டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டலில் முகமது ஷெரீப் என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அவர், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாகவும் அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் ஃபலா பின் சயத் அல் நஹ்யானின் அலுவலக ஊழியர் என்றும் கூறியுள்ளார். சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய … Read more

Old Mysore Region: வெற்றியை தீர்மானிக்கும் கர்நாடக தமிழர்களின் வாக்கு வங்கி!

நடப்பாண்டை பொறுத்தவரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஏனெனில் வரிசையாக 9 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் வடகிழக்கில் மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டது. இதையடுத்து தெற்கில் முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக மாநில தேர்தல் வரவுள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. கடந்த 2018 தேர்தலை அடித்து ஆட்சி கவிழ்ப்பால் பாஜக ஆளுங்கட்சியாக நாற்காலியில் அமர்ந்தது. இம்முறை நேரடியாகவே ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. … Read more

யோகா வகுப்பு எடுப்பதாக கூறி குர்தாவை தூக்கி வயிற்றை காட்டிய ம.பி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செஹோர்: யோகா வகுப்பு எடுப்பதாக கூறி தனது குர்தாவை தூக்கி வயிற்றைக் காட்டி செய்து செய்து காட்டிய மத்திய பிரதேச முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், செஹோர் மாவட்டம் நஸ்லுல்லாகஞ்சில் நடந்த யோகா பயிற்சி மையத்திற்கு சென்றார். அப்போது நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, திடீரென மேடையில் அமர்ந்தவாறு ேயாகா குறித்த விளக்கங்களை அளித்தார். பின்னர், மூச்சுப் பயிற்சி மற்றும்  பிராணாயாமத்தின் … Read more