வாடிக்கையாளர் கேட்டது வெஜ் பிரியாணி… வந்ததோ எலும்புகளுடன் பிரியாணி..!!

 இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் ஆகாஷ் துபே என்ற நபர் அந்த உணவகத்தில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் எலும்புகள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அவர் உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து ஆகாஷ் விஜய் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராதி மீது 298-வது பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் … Read more

வட இந்தியாவில் தொடரும் பனிப்பொழிவு – விமான சேவை கடும் பாதிப்பு

புதுடெல்லி: வட இந்தியாவில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ”புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன” என புதுடெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக … Read more

பிரதமர் மோடி தாயின் உடல்நிலை; டாக்டர்கள் தீவிர சிகிச்சை!

இந்தியாவின் பிரதமராக இருப்பவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி (Narendra Damodardas Modi). மேலும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் பிரதமர் மோடி இருந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். தாமோதர் தாஸ் முல்சந் மோடி மற்றும் கீரபேன் தம்பதிக்கு பிறந்த 6 குழந்தைகளில் நரேந்திர மோடி 3வது குழந்தையாக பிறந்தவர். நரேந்திர மோடி ஏற்கனவே அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை … Read more

வடஇந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம்… 331 ரயில்களின் சேவையை ரத்து செய்தது ரயில்வே நிர்வாகம்!

வட இந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று இயக்கப்படும் 331 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகிய ரயில் நிர்வாகங்கள் உள்ளூர் மற்றும் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் 268 ரயில்களின் சேவையை முழுமையாகவும், 63 ரயில்களின் சேவயை பகுதியாகவும் ரத்து செய்துள்ளன. கடந்த சில நாட்களாகவே, பனிமூட்டம் உள்ளிட்ட காரணிகளால் நூற்றுக்கும் … Read more

பீகாரில் 17 மாநகராட்சி, 68 நகராட்சிகளுக்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பீகாரில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் வாக்குகள் 20ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் … Read more

‘ஃபேக் ஐடி’யால் வந்த வினை: கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்த வடசேரிகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா (17). கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் சங்கீதாவும், பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, காதலர்களுக்கு இடையே சிறுசிறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனது காதலி வேறு யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிய வேண்டும் என்று எண்ணிய கோபு, கொடூர திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி கோபு, சமூகவலைதளத்தில் ‘அகில்’ என்ற பெயரில் … Read more

#JUST IN : பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபா மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து வருவதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தாய் ஹீராபென் மோடியை மருத்துவமனையில் சென்று பார்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  முன்னதாக செவ்வாய்க்கிழமை, கர்நாடகா மாநிலம் மைசூரில் … Read more

''ராவணனின் பாதையை பின்பற்றுகிறது பாஜக'': காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் விமர்சனம்

புதுடெல்லி: ராவணனின் பாதையை பாஜக பின்பற்றுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து கடந்த திங்கள் கிழமை பேசிய சல்மான் குர்ஷித், வட இந்தியா குளிரில் நடுங்கும் நிலையில் வெறும் டி. ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு ராகுல் காந்தி யாத்திரையை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பகவான் ராமரைப் போல தெய்வீக குணத்துடன் ராகுல் காந்தி இருப்பதை இது காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். சல்மான் குர்ஷித்தின் இந்த … Read more

பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச்சண்டை.. பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை..!

ஜம்முவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்முவின் புறநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற டிரக்கை காவலர்கள் சோதனை செய்த போது, அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். Source link

பிரதமர் மோடி தாயார் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

அகமதாபாத்: பிரதமர் மோடி தாயார் ஹீராபென் மோடி உடல்நிலை சீராக உள்ளதாக யு.என். மேத்தா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் என கூறப்படுகிறது.