புதுச்சேரி: என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை கூறுகிறார்கள் – ஆளுநர் தமிழிசை

என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள், சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை மக்கள் நலனுக்காகதான் நான் செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரியில் பட்டயக் கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்… பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில் இந்த … Read more

மஜத கட்சி வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலைில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மஜத கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பீஜாப்பூர் மாவட்டம் சிந்தகி தொகுதி வேட்பாளர் முன்னாள் ராணுவ வீரரான சிவானந்த பாட்டீல் (55) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிவானந்த … Read more

அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகளை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், லைவ் ஸ்ட்ரீமிங்கின் நன்மையை சுட்டிக் காட்டினார். மொழிரீதியான தகவல் தடையை அகற்றுவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.சந்திரசூட் தலைமை நீதிபதியான பின், உச்சநீதிமன்ற விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Source link

மகளிர் ஐபிஎல் அணிகள் ஏலம் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

மும்பை: மகளிர் ஐபிஎல் டி20 போட்டியில் களமிறங்க உள்ள அணிகளின் உரிமத்தை ஏலம் எடுக்க 5 ஐபிஎல் அணிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பிரபல தொழில் நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. உலக அளவில் ஐபிஎல் டி20 தொடர் பிரபலமாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் டி20 போட்டிகளை(டபுள்யூ.ஐபிஎல்)  நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மார்ச் 3-26 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.  இந்த அணிகளை வாங்க … Read more

நூதன சைபர் க்ரைம்: 'நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்' – பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

நீங்கள் அனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகக்கூறி பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் வரை பணம் பறித்துள்ளது ஒரு மோசடி கும்பல். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த  பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாகக் கூறி ஒருவர் போன் செய்துள்ளார். அந்நபர் அந்த பெண்ணிடம், நீங்கள் வெளிநாட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பி உள்ளீர்கள். அந்த பார்சலில் 2 பாஸ்போர்ட்கள், 5 ஏடிஎம் கார்டுகள், 300 கிராம் … Read more

அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் அமர்நாத்துக்கு சென்று வர புதிய சாலை வசதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இங்குள்ள கோயிலில் பனிக்காலத்தில் இயற்கையாகவே உருவாகும் சிவலிங்கத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 11 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதையுடன் 22.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை வசதி அமைக்கப்படுகிறது. கோயிலுக்குச் சென்று வரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் அப்பகுதிக்கு மக்கள் எளிதில் சென்று வர இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான … Read more

நோரா பதேயி யின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து சுகேஷ் சிறையில் இருந்து அறிக்கை

200 கோடி ரூபாய் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சிறையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் நடிகை நோரா பதேயியின் புகார்களுக்கு பதில் அளித்துள்ளார். தாம் நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமாக இருந்ததைத் தாங்காமல் பொறாமையால் நோரா பதேயி தினமும் தமக்கு பத்து முறை போன் செய்வார் என்றும் ஜாக்குலினை விட்டு விலகி, தம்மிடம் பழகும்படி கூறுவார் என்றும் சுகேஷ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். நோரா பதேயிக்கு தாம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளைத் தந்திருப்பதாகவும் … Read more

தேர்தல் தோல்வி எதிரொலி குஜராத் காங்கிரசில் 38 பேர் நீக்கம்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட 38 பேரை காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுகளுக்கு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பாலுபாய் படேல் கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் 1,5 தேதிகளில் குஜராத் சட்டமன்றத்துக்கு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய சப்தகிரி சங்கர் உல்கா, நிதின் ராவத், ஷகீல் அகமது கான் ஆகிய 3 பேர் அடங்கிய குழு … Read more

உ.பி.யில் பூனை காணாமல் போனதால் கோபம் 35 புறாக்களை விஷம் வைத்து கொன்ற பெண்

பரேலி: உ.பி.யின் ஷாஜகான்பூர் நகரின் ஜலால்நகர் பகுதியை சேர்ந்தவர் வாரிஸ் அலி (32). புறாக்களுக்கு பயிற்சி அளிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 80 புறாக்கள் வைத்துள்ளார். இந்நிலையில் 35 புறாக்களை அண்டை வீட்டுப் பெண் விஷம் வைத்து கொன்று விட்டதாக அப்பகுதி காவல் நிலையத்தில் வாரிஸ் அலி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வாரிஸ் அலி கூறும்போது, “கடந்த மாதம் பக்கத்து வீட்டுப் பெண் வளர்த்து வந்த பூனை காணாமல் போனது. இதற்கு … Read more

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை நமது படைகளுக்கு உண்டு… முன்னாள் ராணுவத் தளபதி பேச்சு

இந்தியாவின் இறையாண்மைக்குள் சீனா மூக்கை நுழைத்தால் பதிலடி கொடுக்கும் வலிமை நமது படைகளுக்கு உள்ளது என்று முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜே.ஜே.சிங் கூறியுள்ளார். சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய ஜே.ஜே.சிங், சீனா சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதால் அது தரும் வாக்குறுதிகளை நம்பிவிடக்கூடாது என்றும் எச்சரித்தார் Source link