நிலத்தகராறில் பண்ணை வீட்டுக்கு தீ வைப்பு: சொந்த கட்சி தலைவரை கொல்ல கூலிப்படையை ஏவிய பாஜக நிர்வாகி: பீகார் போலீஸ் அதிரடி

ஜமால்பூர்: முன்விரோதம் காரணமாக சொந்த கட்சித் தலைவரை கொல்ல கூலிப்படையை பாஜக நிர்வாகி ஏவிய நிலையில், இந்த தகவலை அறிந்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் ஜமால்பூர் தொகுதியின் பாஜக மண்டலத் தலைவரும், ஓட்டல் அதிபருமான கிஸ்டோ சிங்கிற்கும், பாஜகவை சேர்ந்த ஓபிசி அமைப்பின் ஜமால்பூர் நகரத் தலைவர் வசிஷ்ட் ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு  இருந்தது. வசிஷ்ட்டின் பண்ணை வீட்டை கிஷ்டோ சிங்கும் அவரது ஆதரவாளர்களும் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து சஃபியாபாத் … Read more

கல்குவாரியில் விபத்து: மிசோரமில் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழப்பு?

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிசோரம் மாநிலம் ஹனத்தியால் மாவட்டம் மவுடார் பகுதியில் ஏபிசிஐ இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம், கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. இந்தக் கல்குவாரியில் நேற்று பிற்பகல் 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் பெரிய பாறை உருண்டு விழுந்ததில் சுமார் 15 தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். அந்த பள்ளத்தின் மீது மேலும் மண் விழுந்து மூடியது. இதையடுத்து … Read more

பிரசாந்த் கிஷோர் சொன்ன அரசியல் மந்திரம்… தேர்தல் அரசியல் சரிப்பட்டு வருமா?

தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் என பல்வேறு மாநில அரசியல்களில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரசாந்த் கிஷோர். தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் ஆட்சிக் கட்டிலையே புரட்டி போட்டிருக்கிறார். இவ்வாறு தேர்தல் நிபுணத்துவம் வாய்ந்த பிரசாந்த் கிஷோர், ஐபேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறி பிகாரில் மையம் கொண்டுள்ளார். அங்கு மாற்று அரசியலை முன்னெடுக்கப் போவதாக கூறி ’ஜன் சூரஜ் யாத்ரா’வை தொடங்கியிருக்கிறார். மாநிலத்தின் இடது, வலது, கிழக்கு, மேற்கு என … Read more

Delhi Murder : பிரிட்ஜில் பழைய காதலி… புது காதலியுடன் வீட்டிற்கு வந்த அப்தாப்… திடுக்கிடும் தகவல்கள்!

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் நேற்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதையடுத்து, அந்த கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதைத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, 18 நாள்கள் இரவு 2 மணிக்கு பின் வீட்டில் இருந்து புறப்பட்டு அவற்றை புதைத்துள்ளார்.  காதலியின் உடல் … Read more

2030-க்குள் இந்தியாவின் மின் தேவையில் பாதியளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்யப்படும் – பிரதமர் மோடி..!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் உலகளாவிய வளர்ச்சிக்கு, இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தெரிவித்த பிரதமர் மோடி, எரிசக்தி விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மின் தேவையில் பாதியளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தார்.  மேலும், உக்ரைனில் அமைதி … Read more

பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

டெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் ஜாக்குலின் மீதும் குற்றச்சாட்டு இருந்தது.

இமாச்சலில் 100 சதவீத வாக்குகள் பதிவான மிக உயரத்தில் அமைந்த வாக்குச்சாவடி

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது. டிசம்பர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், மாநிலத்தில் அமைக்கப்பட்ட தாஷிகேங் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தாஷிகேங் பகுதியானது, உலகிலேயே மிகவும் உயரத்தில் அமைந்த பகுதியாகும். இந்த வாக்குச்சாவடியை மாதிரி வாக்குச்சாவடியாக தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்து ஏற்பாடுகளைச் செய்தது. அங்கு வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேளமிசைத்தும், பாடல்கள் பாடியும் … Read more

ஆர்ஜித சேவை டிக்கெட்; திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் ரூ.300 கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது. இந்த இலவச டோக்கன் மற்றும் ரூ. 300 கட்டண தரிசன டோக்கன்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில், … Read more

மசூதி மதராசாவுக்கு செல்லும் மோகன் பகவத்! தேர்தல் பராக் பராக்!

புதுடெல்லி: செளதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் பிரதமர் மோடி ‘தொப்பி’ அணிந்துள்ளார், ஆனால் இந்தியாவில் மட்டும்அவர் தலையில் ‘தொப்பி’ போடுவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நக்கல் செய்கிறார். பாஜக மற்றும் சங்பரிவாரை சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதரஸாக்கள், மசூதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கிண்டல் … Read more

மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் முலாயம் மருமகளை எதிர்த்து சமாஜ்வாதி மாஜி எம்பி போட்டி: பாஜகவின் ஒரு எம்பி, 5 எம்எல்ஏ வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மெயின்புரி மக்களவை தொகுதி, 5 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முலாயம் சிங் மருமகளை எதிர்த்து முன்னாள் சமாஜ்வாதி எம்பி போட்டியிடுகிறார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில மெயின்புரி  எம்பியுமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில வாரங்களுக்கு முன் காலமானார்.  அதனால் மெயின்புரி எம்பி தொகுதி காலியானது. இந்த நிலையில் தலைமை தேர்தல்  ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘உத்தரபிரதேசத்தின் மெயின்புரி  எம்பி தொகுதி, காலியாக உள்ள … Read more