நேதாஜி பிறந்தநாளை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு  உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று தெரிந்தும், வழக்கறிஞர்கள் ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள். இது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும். குறிப்பாக … Read more

தேசிய விளையாட்டு விருதுகள்: பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது!

தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் … Read more

இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி ஜி-20 மாநாடு இன்று தொடக்கம்

புதுடெல்லி: ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இந்தோனேசியா, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து கடந்த 1999ல் ஜி-20 அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி தீவில் இன்று … Read more

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்… மாநில அரசுகளை கைக்காட்டும் மத்திய அமைச்சர்!

ஒரே நாடு ஒரே வரி என்ற மத்திய பாஜக அரசின் கொள்கையின்படி, நாடு முழுவதும் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி ( GST )அமலில் உள்ளது. அதில் நூற்றுக்கணக்கான பொருட்களும், பல்வேறு வகையான சேவைகளுக்கான வரிகள் மொத்தமாய் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களிடம வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இதுநாள்வரை, அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல். டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படாது ஏன் என்ற கேள்வி பலதரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு … Read more

பெட்ரோலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு-அமைச்சர் ஹர்தீப்சிங் புரி

பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்க்கின்றன என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் மதுபானம் விற்பனையில் மாநில அரசுகள் அதிக வருவாயை ஈட்டி வருவதால் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் கூறினார். கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் எரிபொருட்களின் விலை 43 சதவீதம் உயர்ந்த போதும், கலால்வரி குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவில் 2 சதவீதம் மட்டுமே விலை உயர்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டா. அண்டை … Read more

கேரளாவில் அதிக நாள் முதல்வர் பினராய் சாதனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அதிக நாள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை பினராய் விஜயன் படைத்துள்ளார். கேரளாவில் 2021ம் ஆண்டுக்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுவது வழக்கமாக இருந்தது. இதை இடதுசாரி கூட்டணி முதல்வர் பினராய் விஜயன் மாற்றி அமைத்தார். கடந்த 2016ம் ஆண்டில் அவரது தலைமையில் வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணி, 2021ல் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. இந்தநிலையில் பினராய் விஜயன் புதிய சாதனையை படைத்துள்ளார். … Read more

ஜி-20 மாநாடு: இந்தோனேஷியாவில் பிரதமர் நரேந்திர மோடி!

ஜி – 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷிய நாட்டிற்கு சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், நாளை (நவம்பர் 15) மற்றும் நாளை மறுநாள் ( நவம்பர் 16) ஆகிய இரு நாட்களில் ஜி – 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு விமான … Read more

குடியரசு தலைவர் குறித்து மேற்கு வங்க அமைச்சர் சர்ச்சை கருத்து; மன்னிப்பு கேட்கிறேன்: மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பற்றிய மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியின் சர்ச்சை கருத்து குறித்து மன்னிப்பு கேட்கிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு அவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் மம்தா தெரிவித்தார்.

பள்ளி சீருடையில் திடீர் மாற்றம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டை அணியுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகள் அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை அடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உத்தர பிரதேச மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. … Read more

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் அதிரடி கைது

திருமலை: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேரை ஆந்திர கடலோர காவல்படையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடலோர காவல்படை அதிகாரிகள் கடந்த 10ம்தேதி கலிங்கப்பட்டினம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலோர காவல்படையின் எதிர் திசையில் 2 படகுகள் வந்தன. அதிகாரிகள் அதனை நிறுத்தி படகுகளை சோதனையிட்டனர். அதில் 11 இலங்கை மீனவர்கள் இருப்பதும் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததும் … Read more