தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது என்பது ஒன்றிய அரசின் வார்த்தை ஜாலம்: உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

டெல்லி : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படலாம் என்று ஒன்றிய அரசு வார்த்தையளவில் மட்டுமே பேசுவதாக உச்சநீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது. ஒன்றிய அரசு தங்களுக்கு சாதகமான வகையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பதவி காலத்தை கருத்தில் கொள்ளாமல் நியமிப்பது மோசமான முன் உதாரணம் என்றும், உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை உச்சநீதிமன்றத்தில் உள்ளது போல கொலீஜியம் முறையில் தேர்வு செய்ய உத்தரவிட கோரி உச்சநீதி … Read more

சபரிமலை பக்தர்கள் விமானங்களில் இருமுடி பைகளை எடுத்து செல்ல அனுமதி

புதுடெல்லி: சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பணியகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பிசிஏஎஸ்-ன் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்,விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்களின் நன்மைையை கருதி இருமுடியை தங்களது கைப்பைகளிலேயே கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. … Read more

சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி..!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. … Read more

ராகுலுடன் பாத யாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதா? – பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் பாதயாத்திரையில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி முதல், மகாராஷ்ராவில் நடைபயணம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் யாத்திரையின்போது, இந்தி … Read more

குஜராத்தில் 12 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம்

குஜராத்: குஜராத்தில் 12 பாஜக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக போட்டியிட முயன்ற நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம் – அரசு மீது உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குறுகிய காலத்தில் ஓய்வுபெறக்கூடிய வகையிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜோசப் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் … Read more

25 ஆண்டுகள் நிறைவு… தடைகளை தாண்டி வெள்ளி விழா கொண்டாடும் பிரசார் பாரதி!

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர், தன்னிச்சையாக செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியை உருவாக்க சட்டம் இயற்றியது. இதையடுத்து 1997ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிரசார் பாரதி தொடங்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிற்கென தனியாக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் கிடைத்தது. இதன் கீழ் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தனது செயல்பாடுகளை, ஒளிபரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வந்தது. ஆனால் வெற்றி பெற்ற ஒளிபரப்பு … Read more

பீகாரில் வருமான வரி சோதனை ரூ.100 கோடி கருப்பு பணம் சிக்கியது

புதுடெல்லி: பீகாரில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.100 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது. ரியல் எஸ்டேட், வைர நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பீகாரைச் சேர்ந்த சில வணிகக் குழுக்களுக்கு, பீகார், உபி, டெல்லியில் உள்ள 30 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 17ம் தேதி ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.5 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  14 வங்கி லாக்கர்கள் சீல் … Read more

அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் மோதல் – துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

குவாஹாட்டி: அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் இடையே நேற்று மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில்அசாம் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார். கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மத்திய அரசின்சமரசத்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சூழலில் நேற்று … Read more