டெல்லி மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்தோ பார்மா இயக்குநர் கைது 

புதுடெல்லி: டெல்லி அரசு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதனிடையே, புதிய கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், பெர்னாட் ரிக்கார்ட் என்ற மதுபான நிறுவனத்தின் பொது மேலாளர் பினோய் பாபு மற்றும் அரவிந்தோ பார்மா முழுநேர இயக்குநர் சரத் சந்திர ரெட்டி ஆகிய … Read more

லாலுவுக்கு மகள் கிட்னி தானம்

புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், பல்வேறு  ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் சிங்கப்பூரில் சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தற்போது, டெல்லியில் உள்ள லாலுவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, சிங்கப்பூரில் உள்ள லாலுவின் மகள் ரோகினி தந்தைக்கு சீறுநீரக தானம் செய்வதற்கு … Read more

சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை: இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி

பெங்களூரு: சென்னை மைசூரு இடையேயான‌ வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனைய சேவையை பிரதமர் நரேந்திர‌ மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர‌ மோடி இன்று காலை பெங்களூருவுக்கு வருகிறார். பெங்களூரு நகர ரயில் நிலையத்துக்கு சென்று காலை 11 மணியளவில் பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் நாட்டின் 5வதும், தென்னிந்தியாவின் முதலாவதுமான சென்னை-மைசூரு இடையேயான‌ … Read more

போலீசுக்கு தகவல் தருபவர் ஓட ஓட வெட்டிக்கொலை: தெலங்கானாவில் நக்சல்கள் பயங்கரம்

திருமலை: தெலங்கானாவில் போலீசுக்கு ரகசிய தகவல்களை தருபவரை (இன்பார்மர்) நக்சலைட்கள் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்று, மிரட்டல் கடிதத்தையும் வெளியிட்டுள்ளனர். தெலங்கானா – சட்டீஸ்கர் மாநில எல்லையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, 20 நாட்களுக்கு முன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா டிஜிபி மகேந்தர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு நடத்தி, போலீசாரை உஷார்படுத்தினார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் உள்ள கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சபகாகோபால் என்பவரின் வீட்டிற்கு நேற்று … Read more

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2009-ல் தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) சார்பில் மக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படுவதுடன், 10 விரல் ரேகைகள், கருவிழிப் படலம் உள்ளிட்ட தகவல்களும் … Read more

மக்களவை இடைத்தேர்லில் அகிலேஷ் மனைவி போட்டி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மெயின்புரி மக்களவை தொகுதி எம்பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் இறந்தார். இதையடுத்து, இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், இந்த தொகுதியின் வேட்பாளராக  சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், அறிவிக்கப்பட்டு உள்ளார். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இது வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு … Read more

இஸ்ரோ சோதனை வெற்றி எல்விஎம்-3 ராக்கெட்டின் சுமக்கும் திறன் அதிகரிப்பு: 450 கிலோ கூடுதலாக எடுத்து செல்லும்

பெங்களூரு: இந்தியாவின் அதிக எடை கொண்ட எல்விஎம்-3 ராக்கெட், கூடுதலாக 450 கிலோவை சுமந்து செல்லும் வகையில் கிரையோஜனிக் இன்ஜினின் திறன் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிக எடை கொண்ட எல்விஎம்-3 ராக்கெட் மூலம், கடந்த மாதம் 23ம் தேதி 5.8 டன் கொண்ட 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை, இந்த ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், எல்விஎம் -3 ராக்கெட் கூடுதலாக … Read more

இந்தியாவில் சோலார் பயன்பாடு அதிகரிப்பால் 6 மாதத்தில் ரூ.35,000 கோடி எரிபொருள் சேமிப்பு: 2 கோடி டன் நிலக்கரியும் மிச்சம்

புதுடெல்லி: நாட்டில் சோலார் பயன்பாடு அதிகரிப்பால், 6 மாதத்தில் ரூ.35,000 கோடி எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் நிறுவனமான ஆற்றல் மேம்பாடு மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம், டந்த 10 ஆண்டுகளாகவே ஆசிய நாடுகளில் சோலார் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக ஆற்றல் மேம்பாடு மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் … Read more

நான்தான் கொன்றேன்: மஸ்க் டிவிட்டால் பரபரப்பு

புதுடெல்லி: டிவிட்டரில் குறிப்பிட்ட சில அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்பட்ட லேபிள் திடீரென மறைந்தது. ‘இதை நான்தான் கொன்றேன்’ என்று மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது முதல், தினமும் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்து வருகிறார். அதன்படி, டிவிட்டரில் சமீபத்தில் வெளியான புதுப்பிப்பு கொள்கையின்படி, குறிப்பிட்ட சில சரிப்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ‘அதிகாரப்பூர்வமானவை’ என்பதை குறிப்பிடும் வகையில் புதிய முத்திரை (லேபிள்) வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது பிரதமர் மோடியின் கணக்கு உட்பட, … Read more

தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் மோசடி வழக்கு – ” நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை ஏன் கைது செய்யவில்லை. ? ” டெல்லி நீதிமன்றம் கேள்வி..

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை கைது செய்யாமல் அமலாக்கத்துறை ஏன் பாரபட்சம் காட்டுகிறது? என டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், சில தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பறித்த வழக்கின் துணை குற்றப்பத்திரிக்கையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார். அவர் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிக்க … Read more