வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன, மிக கன மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள … Read more

கடன் செயலி மோசடி: டெல்லி போலீசிடம் சிக்கிய கும்பல் – பின்னணியில் சீன நபர்கள்

கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டிய மோசடிக் கும்பலை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்மை காலமாக ஆன்லைன் மூலம் உடனடியாக கடன் வழங்கும் செல்போன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எளிதாகவும் விரைவாகவும் கடன் கிடைக்கும் போன்ற ஆசைவார்த்தைகளைக் கூறி வலைவிரிக்கும் இதுபோன்ற கடன் செயலி நிறுவனங்கள், கடன் வாங்கியவர்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்கின்றன. பணத்தேவை உள்ளவர்களுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று சிறிய தொகையை கடனாக வழங்கி அளவுக்கதிகமாக வட்டியை … Read more

இமாச்சலில் தயாராகும் கலை பொருட்களை ஜி20 தலைவர்களுக்கு பரிசளிக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தோனேசிய பாலி தீவில் ஜி20 மாநாடு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, இமாச்சலில் தயாராகும் கலை, கைவினைப் பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ளார். குறிப்பாக சம்பா கைக்குட்டை, கங்க்ரா மினியேச்சர் பெயின்ட்டிங், கின்னவுரி ஷால், குல்லு ஷால் மற்றும் கனால் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் … Read more

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் | காங்கிரஸிலிருந்து அணி மாறியவர்கள் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம்

காந்திநகர்: குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள படேல் இனத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த ஹர்திக் படேல், … Read more

குடியரசு தலைவர் இன்று ஒடிசா பயணம்

டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று ஒடிசா செல்கிறார். பதவியேற்ற பின் முதன் முறையாக சொந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி?

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளது. இதற்கான உத்தேச வேட்பாளர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள ரிவாபா, 2016-ம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார். குஜராத் மாநில பாஜக தலைவர்களுடன் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் … Read more

ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தல்: பாஜகவிற்கு ஷாக்… டஃப் கொடுக்கும் காங்கிரஸ்- கருத்துக்கணிப்பு முடிவுகள்!

ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய இருமாநில சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ள நிலையில் இம்முறை காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளும், கள நிலவரமும் வேறுமாதிரியாக வந்த வண்ணம் இருக்கின்றன. 68 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹிமாச்சல் சட்டமன்றத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2017ல் … Read more

தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம் – அதிர்ச்சியடைந்த பெண்

கர்நாடகா மாநிலத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துவருகிறது. இந்தத் தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுத பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அந்தவகையில் பெண் ஒருவர் தேர்வுக்கான தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தார். அப்போது அந்த ஹால் டிக்கெட்டில் விண்ணப்பித்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தேர்வர் இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தார். இதனையடுத்து … Read more

ஜம்மு – காஷ்மீரில் பேருந்துகள் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சம்பா: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 3வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.