சுடுகாட்டில் பிறந்த நாள் கொண்டாடிய நபர்.. காரணம் என்ன தெரியுமா..?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் சுடுகாட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன் (54). இவர், கடந்த 19-ம் தேதி தனது பிறந்த பிறந்த நாளை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கேக் வெட்டிய கவுதம் ரத்தன், … Read more

பீமா கோரேகான் வழக்கு: ஆனந்த் டெல்டும்டே ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை கோரி என்ஐஏ தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் எதுவும் இறுதியானது என்று கருதப்படாது என்றும் கூறியது. 2018 ஜனவரி 1 ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடந்தபோது, பீமா கோரேகானில் வன்முறை … Read more

சபரிமலையில் சின்னம்மை நோய்; ஐயப்ப பக்தர்களுக்கு திடீர் உத்தரவு!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் உள்ளது. இந்த கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக கடந்த 16ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகின்றனர். சபரிமலையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும் நிலையில் கோயில் சன்னிதானத்தில் … Read more

National Milk Day 2022: வெள்ளை புரட்சிக்கு வித்திட்டவர்… யார் இந்த வர்கீஸ் குரியன்?

National Milk Day 2022: வெண்மைப் புரட்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் நினைவாக இந்தியா முழுவதும் தேசிய பால் தினம் இன்று (நவ. 26) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் பால்பண்ணைத் தொழிலை நாட்டின் மிகப்பெரிய தன்னிறைவுத் நிலையை நோக்கி உயர்த்திய ‘Operation Flood’-ல் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்திய பால் சங்கம் (IDA) எடுத்த முயற்சியின் பலனாக, 2014ஆம் முதல் இந்தியாவில் தேசிய பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021-2022 இந்திய … Read more

ராகுலுக்கு கொலை மிரட்டல் ம.பி-யில் ஒருவர் கைது

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரை வெடிகுண்டை கொண்டு கொலை செய்வதாக, மர்ம நபர் ஒருவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து உஜ்ஜைனி போலீஸ் எஸ்பி கூறுகையில், ‘ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய குற்றவாளி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த  நரேந்திர சிங் என்பது அடையாளங்காணப்பட்டது. கடந்த காலங்களில் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வந்தார். தற்போது … Read more

தன்பாலின உறவாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு தன்பாலின தம்பதிகள் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், இரு தன்பாலின உறவு தம்பதியர் தங்களின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான … Read more

ஆளுநருக்கு ஆதரவாக களமிறங்கிய துணை முதல்வர் மனைவி..மராட்டியத்தில் சலசலப்பு.!

மகாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமைக் கோரி வருவதால், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த, இரு தரப்புக்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதற்கிடையே, அண்மையில், அவுரங்கபாத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி … Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்

ரயில் நிலைய உணவு: நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்களா? பயணிக்கும்போது  வழக்கமாக ரயில் அல்லது ரயில் நிலையத்திலேயே விற்கப்படும் உணவை சாப்பிடுகிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆம் என்றால், கவனமாக இருங்கள். ஆம், கோடிக்கணக்கான ரயில்வே பயணிகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது பணவீக்கத்தின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இறுதியாகும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு … Read more

தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு..!!

டெல்லி: தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்று முதல் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனையை தளர்த்த அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

தன்பாலின தம்பதி திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி மனு – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின தம்பதியர் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான சுப்ரியோ சக்கரவர்த்தி மற்றும் அபய் டாங் இருவரும் கடந்த 10 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் மற்ற தம்பதிக்கு உள்ள சுதந்திரம், உரிமைகள் தங்களுக்கு இல்லை, எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் … Read more