`கௌரவ’த்திற்கு பெண் உயிரை கேட்கும் குடும்ப அமைப்புகள் – எப்போதுதான் மா(ற்)றப்போகிறோம்?

டெல்லியில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி, உ.பி.யில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட மனைவி, தமிழகத்தின் திருப்பூரில் ஷால் மூலம் கழுத்தை நெறித்து கணவனாலேயே கொலை செய்யப்பட்ட மனைவி…. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாவற்றிலும் இருக்கும் இரு ஒற்றுமைகள் – பெண்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; அதுவும் தனது நெருங்கிய உறவால். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை… ஐ.நா.வும் சொல்கிறது. ஆம் இணையராலும், கணவனாலும், குடும்பத்தினராலுமே பெண் இப்படி கொலைசெய்யப்படுவதென்பது, நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது என்கின்றது … Read more

மழைக் காலம் வந்து விட்டது.. இந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம்..!

மழைக் காலம் வந்தாலே தொண்டை கரகரப்பு, நெஞ்சு சளி, சைனஸ், தலைவலி, ஆஸ்துமா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே,உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மழை காரணமாக, நோய் தொற்றுகள் அதிகம் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் தேவை. அதேபோல ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படலாம். இந்நிலையில், தெலுங்கானாவில் டைபாய்டு … Read more

வேலைக்கு வராத மருத்துவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு

டேராடூன்: உத்தரகாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சலுகை கட்டணத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும். ஆனால், இவ்வாறு அரசு வேலையில் இருக்கும் மருத்துவர்கள் சிலர் முறையான தகவல் இல்லாமல் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து விடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையான தகவல் எதுவும் வழங்காமல் தலைமறைவான 109 மருத்துவர்களை சுகாதாரத் துறை தேடி வருகிறது. அவர்கள் பெயரை கருப்புப் பட்டியலில் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது. … Read more

'அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி' – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி உள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. விரைவில் தேர்தல் … Read more

வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் உயர்நீதிமன்றத்துக்கு சென்று முறையீடுங்கள் என கூறி தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கை தள்ளுபடி செய்தார்.    

பிஹார் அவலம் | 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தண்டனை ஐந்து உக்கி

பாட்னா: பிஹாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஊர் பஞ்சாயத்து வெறும் 5 உக்கிகளை தண்டனையாக வழங்கியுள்ளது. இந்தத் தண்டனை வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவ இது குறித்து பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். கூடவே, பிஹார் அரசு இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். பிஹாரின் நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி தனது … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிச.6ல் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

குஜராத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் இவ்வளவு பேரா? – முதலிடம் எந்த கட்சிக்கு தெரியுமா?

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 21% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குஜராத் மாநில  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. … Read more

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதின்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 2015-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அனுப் பாரன்வால், பாஜக மூத்த தலைவர் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி: மணீஷ் சிசோடியா புகார்

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புகார் அளித்துள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் சதி நடக்கிறது என அவர் கூறினார்.